Search This Blog

Showing posts with label அரசியல்.தமிழ்நாடு. Show all posts
Showing posts with label அரசியல்.தமிழ்நாடு. Show all posts

Thursday, 20 January 2011

உதைத்த காலுக்கு முத்தம்தர இடதுசாரிகளுக்கு ஜெயலலிதா அழைப்பு!


அப்பாடி! கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆசை நிறைவேறிவிட்டது. இத்தனை நாளும் அவர் களை ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப் படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது, சட்டமன்றத்தில் ஆளுனர் உரை நிகழ்த்திய போது, அ.தி.மு.க.வினர் நடத்திய அராஜகங் கள், அட்டூழியங்கள் ஆகியவற்றை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஆதரித்ததையும், அவைக் காவலர்களை அ.தி.மு.க.வினர் தாக்கியதையும், முகத்திலும், மார்பிலும் ஓங்கி ஓங்கி குத்தி தாக்கியதையும், அவைக்கு வெளியே பேச்சு, பேட்டி, போட்டிக் கூட்டம் ஆகி யவை போன்ற நகைப்புக்குரிய - அதேசமயம் காலிதனத்துக்கு நிகரான கலவரங்களையும் பலமாக கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்து நின்றதையும் கண்ட ஜெயலலிதா, இனியும் இவர்களை நாம் மதிக்காமல் இருக்கக் கூடாது. இவர்கள் ரொம்பவும் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். நமது கட்சியின் ஏவலாட்களாக நடந்து கொள் வார்கள். நாம் தலையால் இட்ட உத்தரவுகளை அவர்கள், தங்களது முணுமுணுப்பைக் கூட காட்டாமல் நிறைவேற்றித்தர பாடுபடுவார்கள் என்று நினைத்து கம்யூனிஸ்டு கட்சியினர் பால் தனது கருணை பார்வையை திருப்பியிருக்கிறார்.

இது கம்யூனிஸ்டுகளுக்கு வரலாறு காணாத மகிழ்ச்சியை வாரி வழங்கியிருக்கிறது. அவர்கள் ஆஹா அம்மாவுக்கு வன்முறை என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதனால் சட்டசபையில் அம்மாவின் கவனத்தை நம்பக்கம் திருப்பவும், அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெறவும் நாம் அ.தி.மு.க. வினருடன் சேர்ந்து கொண்டு அவையிலும், வெளி யிலும் நிகழ்த்தியகளே பரங்கள், கலகங்கள், அமளிகள் அம்மாவை -அம்மாவின் திருப் பார்வை நம்மீது திரும்ப வைத்து விட்டது என்ற சந்தோஷம் உச்சம் தலைக்கேற உவப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள்.

 ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பற்றி பேச வாருங்கள்’ என்ற இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினமணி பத்திரிகை கூட இடதுசாரிகளை தேர்தல் கூட்டணிக்காக வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அந்தக் கட்சிகளின் மீது ஜெய லலிதா கொண்டுள்ள மதிப்பின் காரணமாக விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல அது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிட்டும் என்ற நெஞ்சு கொள்ளாத ஆசையுடன் ஜெயலலிதா கால் கடுக்க காத்து நின்றார். அவரது ஆசை நிறைவேறாது என்பதை சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கே ‘தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது அது தொடரும்’ என்று பகிரங்கமாகவே அறிவிப்பு செய்ததின் மூலம் நிராசையாக, நிறைவேற முடியாத ஆசையாக ஆகி விட்டது. அதன் பிறகே வேறு வழியில்லாத ஜெயலலிதா, இடதுசாரிகளுக்கு கூட்டணி பற்றி பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.

மற்றபடி இந்த கட்சியினரின் பலத்தையோ மக்கள் செல்வாக்கையோ மதித்து அல்ல, அல்லவே அல்ல என்பதை தெளிவாக்கும் வகையில் தினமணி எழுதியுள்ள செய்தி விமர்சனம் வருமாறு :

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி பேச வருமாறு இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் , இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால் ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 5 என இருமுறை அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தது. இதேபோல், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ச்சியான கூட்டுப் போராட்டங் களை நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சித்தன. எனினும், மாநில தி.மு.க. அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நேரடி போராட்டங்களை நடத்த ஆர்வம் காட்ட வில்லை. கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசுக்கு எதிராகவே நடத்தப்பட்டன. இதற்கிடையே மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக கடந்த செப்டம்பர் 26ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வைச் சந்தித்தனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராட்டங் களை நடத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.

 இதுபற்றி மதுரை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் (அக்.18) முடிந்தபின் பரிசீலிக்கலாம் என்று அவர்களிடம் ஜெயலலிதா தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது. எனினும், மதுரை ஆர்ப் பாட்டத்துக்குப் பிறகும் கூட்டுப் போராட்டம் பற்றி அ.தி.மு.க. தரப்பிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். இதனால், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றால், மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கத் தயார் என்று கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவின் இந்த ஆதரவு அறி விப்புக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு 2ஜி அலைக்கற்றை ஊழலை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்தன. சென்னையில் அ.தி.மு.க. உள் ளிட்ட எதிர்க்கட்சிகளை அழைத்து பெரிய அளவில் பேரணி நடத்தவும் அக்கட்சிகள் தீர்மானித்தன. எனினும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அ.தி.மு.க. தீவிரமாக ஆராய்ந்து கொண் டிருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டுப் பேரணி நடத்துவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்பட்டது. கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர, ஏற்கனவே கூட்டணியில் உள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவது பற்றி எதுவும் கூற வில்லை. நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன், அ.தி.மு.க. தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்ப தாகவும் அப்போது பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்து விட்டுச் சென்றார். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிய எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை இருகட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்டன.

இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இருகட்சிகளை யும் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சென்னை யில் திங்கள்கிழமை உறுதி செய்தார். தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல் லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ்காரத் தெரிவித்தார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா தொலை பேசி யில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர். - என்பதாக செய்தி விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும் என்ன?  ""மதியாதார் தலைவாசல் மிதியாதீர்"" என்று நமது முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் சொன்ன முதுமொழிகளை பத்து சீட்டுக்காக மானம் மரியாதை எதையும் இழந்துவிட எப்போதும் காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் மதிக்கவா போகிறார்கள்.  அவர்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று ஆர்ப்பரித்து , 1991 - 1996 2001 - 2006 ஆகிய காலகட்டங்களில் தொடர்ந்து காட்டாட்சி நடத்திய ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய படாதபாடு படுகிறார்கள்! அதனால்தான் -  உதைத்த காலுக்கு முத்தமிடத்துடிக்கிறார்கள்!

நன்றி:முரசொலி 13-01-2011

Wednesday, 19 January 2011

வெங்காய விலை உயர்வும் தமிழக அரசு படைத்த முன்னுதாரணமும்!

    
மற்ற உணவு தானியங்களைப் போலவே வெங்காயத்தின் விலையும் கடந்த சில நாட்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது. விண்ணை முட்டிக் கொண்டு போகிறது என்று மற்ற பண்டங்களின் விலை உயரும் போதெல்லாம் சொல்வது வழக்கம். அதை உண்மை தான் என்று எல்லோரும் ஆமோதிக்கும் வகையில் இப்போது வெங் காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து இருக்கிறது.  இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு வியாபாரிகளைப் பொறுத்தவரையில் வெங்காய விலை உயர்வுக்கு கூறும் காரணம், பொதுவாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் பாவூர்சத்திரம், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, வத்தலகுண்டு, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வந்து இறங்கும். ஆனால் மழையின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் வெங்காயம் விளையவில்லை. 

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் தற்போது 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து இறங்குகிறது. வெங்காயவரத்து குறைந்ததின் காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளில் அதிக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிவிட்டது. இதன் காரணமாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து மார்க்கெட்டுக்கு வந்தால்தான் விலை குறையும் என்று தமிழக வெங்காய வியாபாரிகள் சார்பில் சமாதானம் கூறப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் பலவும் இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு ஏதோ அரசாங்கம் தான் காரணம் என்பது போல இந்தப் பிரச்சினையால் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் இதனை பெரிதுபடுத்தி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் வெங்காய விலை உயர்வை வாயாலே வெளியில் எதிர்க்கிறார்களே தவிர, அவர்கள் மனசுக்குள் எல்லாம் வெங்காயம் இன்னும் விலை உயர வேண்டும், சட்டமன்றத் தேர்தல் வரையில் விலை உயர்ந்து கொண்டே போகவேண்டும். அப்போது இந்த வெங்காய விலை உயர்வை வைத்து ஆளும் கட்சியை தோற்கடித்து விட முடியும் என்கிற நப்பாசை மேலோங்கிக் கிடக்கிறது. இதற்கு அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அது என்ன? 1998-ல் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அப்போது டெல்லி யில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் கிலோ 20 ரூபாய் என்று விலை உயர்ந்து இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அப்போது நடந்த தேர்தலில் வெங்காய விலை காரணமாகவே பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்க்கட்சியினர் இப்போது வெங்காய விலை உயர்வை பூதாகரமாக பெரிதுபடுத்தி விட முயற்சிக் கிறார்கள். ஆனால் வெங்காய விலை உயர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ள விலைவாசி நிலவரம் அல்ல. 

தமிழகத்தில் வெங்காய விலை கிலோ 85 ரூபாய் என்பதாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கொல்கத் தாவில் கிலோ 60 ரூபாய்க்கும், டில்லியில் கிலோ  70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மொத்த விற்பனை யில் கிலோ 70 ரூபாய்க்கும் சில்லறையில் அதிகபட்சமாக நூறு ரூபாய் வரையிலும் உயர்த்தியே விற்கப் பட்டு வருகிறது. இந்த வெங்காய விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், தவறான பொருளாதார குழுவை திறமையற்ற நிர்வாகம் உள்ளிட்டவைகளே காரணம் என்று கூறுகின்றன. எனினும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்காமல் இல்லை. அது பதுக்கலை தடுக்க அதிரடி சோதனைகளுக்கான ஏற்பாடு களை செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்திய மக்களுக்குத் தேவையான அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. விலை உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகாரம் விவசாயத் துறை களின் செயலாளர்களுக்கு அவர் உத்தரவு இட்டுள்ளார். ஜனவரி 15 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசின் வேளாண் பொருட்கள் விலைகளை முறைப்படுத்தும் அமைப் பான ""நட்பெட்"" நேற்று முன்தினம் தடை விதித்துள்ளது.  இதுகுறித்து பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""வெங்காய ஏற்று மதிக்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தேவைக்கும் சப்ளைக்கும் இடையே வேறு பாடு இருப்பது தெரிகிறது. சப்ளைக்கு உள்ள தடங்கல் என்ன என அரசு விசாரிக்கும். சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசுவேன்"" என்றார். மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ""இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு விலை இப் படியே நீடிக்கக்கூடும். அதன் பிறகு விலை குறைந்துவிடும்"" என்றார். ஆகவே, வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய சர்கார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வில்லை. அது சந்தை முதலாளிகளிடம் சரணடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தது நூற்றுக்கு நூறும் உண்மை அல்ல. அது போலவே வெங்காய விலை தமிழகத்தில் மட்டும் தான் உயர்ந்துவிட்டது என்பது அல்ல.

நாடு முழுவதிலும் இக்கால கட்டத்தில் விலை தமிழகத்தைப் போலவே உயர்ந்துதான் இருக்கிறது என்பதையும் மேலே கண்ட தகவல்கள் உறுதி படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் வெங்காய விலை உயர்வில் இருந்து பொது மக்களை காப்பாற்ற மின்னல் வேக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு முன்னுதாரண மாகத் திகழ்கிறது. இதனை நாம் சொல்லவில்லை. தி.மு.கழகத்தையும், தமிழக அரசையும் நாள் தவறாமல் எதிர்ப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்ட ""தினமணி"" ஒரு செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அது என்ன செய்தி

தமிழகத்தில் வெங்காயத்தை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது என்பதே அந்த செய்தி. அது வருமாறு :- சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.40 வரை விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.60ஐ தாண்டி விற்று வருகிறது. விலை உயர்வு அடுத்த மூன்று வாரங் களுக்குத் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை கடைகளில் விற்கப்பட்டு வரும் வெங் காயத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளில் மட்டுமே இதுவரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இறங்கு முகத்தில் இருந்தபோது கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது.  விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் வெங்காயம் விற்கப்படும் அனைத்து டி.யு.சி.எஸ். கடைகளிலும் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், தேனாம்பேட்டை பெசன்ட் நகர், அசோக்நகர், செனாய்நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரன்சிங் தெரிவித் துள்ளார். சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.35க்கும், பெங்களூர் வெங்காயம் (பல்லாரி) கிலோ ரூ.40க் கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.55க்கும் டி.யு.சி.எஸ். கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 வரை விற்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

வெங்காயத்துக்கு இணையாக உருளைக் கிழங்கையும் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் என்றும் ஸ்வரன் சிங் கூறினார். டி.யு.சி.எஸ். கடைகளில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்கு அளவு உண்டு. ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே அளிக்கப்படும். ஹோட்டல்களின் பயன்பாட்டுக்கோ, மொத்தமாக 5 அல்லது 10 கிலோ என்ற நிலையிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட மாட்டாது என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல்லாரி வெங்காயம் நான்கு டன்னும், உருளைக் கிழங்கை 4 டன்னும் கொள்முதல் செய்து விநியோகிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 2 டன்னும் கொள்முதல் செய்யப்படுகிறது. டி.யு.சி.எஸ். கடைகளுக்காக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை இருப்பு வைக்க தனியான குளிர்பதனக் கிடங்கு இல்லை. இதற்கான மாற்று ஏற்பாடு செய்யவும் உணவுத் துறை நட வடிக்கை எடுத்து வருகிறது என்கிறார் ஸ்வரன் சிங். கொள்முதல் விலையுடன் போக்குவரத்துச் செலவு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு விற்பனை செய்கிறோம். ஈரோடு, நாகர்கோவில் போன்ற நகரங்களில் வெங்காயத்தின் விலை சென்னை நகருக்கு இணையாக கடுமையாக உள்ளது. எனவே, அங்கெல்லாம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவ தாக ஸ்வரன்சிங் தெரிவித்தார். - என்பதே தினமணிவெளியிட்டுள்ள அந்த நற்செய்தியாகும். ம்ம்ம் இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? வெங்காயத்தின் விலை உயர்வுக்கு அரசாங்கம் காரணமல்ல; பற்றாக்குறையைப் பயன் படுத்தி பண்டங்களைப் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளே காரணம் ; அதனால் தான் வெங்காயத்தின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது. தமிழக அரசால் மட்டும் கிலோ 40 ரூபாய் விலைக்கு வழங்க முடிகிறதே ; அது எப்படி? அந்த ரகசியத்தைத்தான் ""கொள்முதல் விலையுடன் போக்குவரத்து செலவு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே குறைந்த விலையில் அதாவது வெளி சந்தைகளின் விற்பனை விலையைவிட பாதி அளவே விலை வைத்து விற்பனை செய்கிறோம்"" என்பதாக தமிழ்நாடு உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ஸ்வரன்சிங் கூறினார். அதுதான் அந்த ரகசியம் என்பது மட்டு மின்றி தமிழக அரசின் சாதனை மகுடத்தில் இன்னொரு ஒளி வீசும் வைர கல்.      
நன்றி:முரசொலி 23-12-2010

பொதுக் கணக்குக் குழுவின் அதிகார வரம்பு பற்றிய சுஷ்மா சுவராஜ் கருத்தும் சி.சுப்பிரமணியம் படைத்த முன்னுதாரணமும்!

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அதை நடத்தப்பட்ட 23 நாட்களிலும் அவையை நடத்த முடியாமல் அமளி ஏற்படுத்தி முடக்கியது பா.ஜ.க., அதன் பின்னரும், பட்ஜெட் கூட்டத் தொடரையும் இது போலவே நடக்க விடாமல் முடக்குவோம் என்று அது அறிவித்து இருக்கிறது. எனினும், பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி முதல் சச்சரவு அமளி களுக்கு இடம் இல்லாத வகையில் சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி களின் கூட்டத்தை கூட்ட முன் வந்திருக்கிறார் மக்களவைத் தலைவர் மீராகுமார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதாக பா.ஜ.க. தலைவி சுஸ்மா சுவராஜ் அறி வித்திருக்கிறார். எனினும் பா.ஜ.க. வுக்கே உரிய கலவர புத்தியின் அடிப்படையில் மக்களவைத் தலைவர் கூட்டுகிற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றாலும் நாடாளுமன்ற இரு அவையின் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையில் இருந்து பின் வாங்கிவிட மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டு இருக் கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் எவரும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ""பொதுக் கணக்குக் குழு வெறுமனே கணக்கு வழக்குகளை மட்டுமே சரிபார்க்கும். அதன் விசாரணை வரம்பு மிக சிறியது. ஆனால் நாடாளுமன்ற கூட்டு விசார ணைக் குழுவின் வரம்பு அதிகம். இது வெறுமனே கணக்கு வழக்குகளை மட்டுமே பார்க்காது கூடுதலாக ஒவ்வொன்றுக் கும் உள்ள பொறுப்புகளை ஆராயும். பொதுக் கணக்குக் குழு பிரதமர் தவிர பிற அமைச்சர்களையும் விசாரிக்கலாம் என்று பிரதமர் கூறுவது தவறானது ஆகும். மக்களவை விதிகளின் படி பொதுக் கணக்கு குழு அமைச்சரை அழைத்து விசாரிக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலில் பிரதமர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறுவது அர்த்தமற்றது"" என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் அவரது கட்சியின் மேல்மட்ட தலைவர்களில் முக்கியமானவரும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி சுஸ்மாவின் கருத்துக்கு மாறாக பிரதமரை உரிய நேரத்தில் விசார ணைக்கு அழைக்க விரைவில் முடிவெடுப் பேன்என்று அறிவித்து இருக்கிறார். ஆக, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொதுக் கணக்குக் குழுவின் அதிகாரங்களையே குறைத்து மதிப்பிடுகிறார். ஆனாலும் அவரது கட்சியை சார்ந்த முரளி மனோகர் ஜோஷியோ பிரதமரை உரிய நேரத்தில் பொதுக் கணக்குக் குழுவிற்கு வந்து விசாரணையில் கலந்து கொள்ளுமாறு உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்கிறார். அப்படியானால் பொது கணக்கின் மீது அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரே என்றாலும் அந்த விசாரணையில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் ஆகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வின் அதிகாரபூர்வமான கொள்கை என்ன? பொதுக் கணக்குக் குழு விசாரணையில் எந்தவித பயனும் இல்லை என்று கூறுகிற கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் முரளி மனோகர் ஜோஷி பொதுக் கணக்கு குழுவை கூட்டி ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, எட்டு முறை கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோ சனை நடத்தியிருப்பதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை. முரளி மனோகர் ஜோஷி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைதான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷகீல் அகமது ஆணித்தரமாக கேட்டிருக்கிறார்.  இதுபற்றி பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- 2ஜி அலைக்கற்றை விற்பனை விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் விசாரிக்க வேண்டும் என்று கோரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அந்தக் கருத்தை ஏற்காமல் விசாரணையைத் தொடங்கிய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரில் ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் ஷகீல் அகமது. டெல்லி நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது:-  இந்த விவகாரத்தை பொதுக் கணக்குக் குழு (பி.ஏ.சி.) விசாரித்தாலே போதும் என்று அரசு தரப்பு கூறிவருகிறது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் பிற கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் (ஜே.பி.சி.) விசாரிக்க வேண்டும் என்று அடம்  பிடிக்கின்றன. இந்த நிலையில் பொதுக் கணக்குக் குழுவின் தலைவரும் பா.ஜ.க.வின் மூத்த தலை வருமான முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கி விட்டார். இந்தக் குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்கவும் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக அறிவித்து விட்டார். இந்த நிலையிலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. தலைவர்கள் விடாப்பிடியாக வலி யுறுத்துகின்றனர். எனவே அந்தக் கட்சித் தலைமை தார்மீக அடிப்படையில் இரண்டு முடிவில் ஏதாவது ஒன்று தவறானது என்று ஒப்புக் கொண்டு இரு தலைவர்களில் ஒருவரை ராஜிநாமா செய்யச் சொல்ல வேண்டும் என்றார் ஷகீல் அகமது. அப்படிச் சொல்லிவிட்டு, ""அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம், நாங்கள் எதையும் வற்புறுத்த முடியாது"" என்றார். பொதுக் கணக்குக் குழுவால் மத்திய அமைச்சரைக்கூட வரவழைத்து நேரில் தகவல் பெற முடியாது என்பதே நடைமுறை. சில சந்தர்ப்பங்களில் அமைச்சர் களாக முன்வந்து ஆஜராகியிருக்கிறார்கள். ""பிரதமரை அழைத்து விசாரிக்கும் அதிகாரம் இந்தக் குழுவு க்கு இல்லை"" என்றார் ஷகீல் அகமது. - என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க பொதுக் கணக்குக் குழு முன்பு அமைச்சர்கள் யாரும் ஆஜராக விதிமுறைகளில் இடமில்லை. அமைச்சர்களை பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகும் படி உத்தரவிட அதற்கு அதிகாரம் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங் இதுபற்றி அறிவித்துள்ளது அர்த்தமற்றதுஎன்று சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டு இருக்கிறாரே அதுவாவது சரியா. அமைச்சரை விசாரணைக்கு அழைக்க விதிகளில் இடமில்லை என்றாலும் 40 ஆண்டு களுக்கு முன்பு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தலைவரின் விசேஷ அனுமதி பெற்று அப்போது அமைச்சர் ஆஜராக வழி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மக்களவை தலைவரின் விசேஷ அனு மதியின் பேரில் பிரதமரோ அவரது அமைச்சர்களோ பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி விசாரணை யில் கலந்து கொள்ளலாம் என்பது முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆகவே பொதுக் கணக்குக் குழு அமைச்சர் எவரையும் தன் முன் ஆஜராகும் படி அழைப்பு விடுக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று சுஸ்மா சுவராஜ் கூறியிருப்பதுதான் அர்த்தமற்றதே தவிர பிரதமர் கூறிய விளக்கம் அர்த்தம் உள்ளது தான். நூற்றுக்கு நூறு சரியானவைதான்! ஆகவே நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும். அப்போது தான் பிரதமரை அழைத்து விசாரிக்க முடியும் என்று பா.ஜ.க.வினரும் எதிர்க்கட்சிகளும் இதுவரை கூறி வந்த அந்த ஒரே காரணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் பொதுக் கணக்குக் குழுவில் ஆஜராக நான் தயார் என்று முரளி மனோகர் ஜோஷிக்கு கடிதம் எழுதியிருப்பதும் ஜோஷி அதை ஏற்றுக் கொண்டிருப்பதும், பா.ஜ.க.வினருக்கு மரண அடியாக விழுந்து அவர்களது ஒரே வாதமான பொதுக் கணக்குக் குழுவிற்கு பிரதமரை அழைக்க அதிகாரம் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே அப்படி அழைக்க முடியும் என்பதும் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டது. இனியும் நாடாளு மன்றத்தை முடக்குவோம் என்று அவர்கள் கூற முடியுமா? முடிவே முடியாது. 
நன்றி:முரசொலி 30-12-2010