Search This Blog

Wednesday, 19 January 2011

ஜெயலலிதாவின் 2001 - 2006 ஆட்சியில் விவசாய கூட்டுறவுத்துறை சீரழிந்த கதை!

இன்று வந்த ஏடுகளில் எல்லாம் - கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு முதல்வர் கலைஞர் அளித்துள்ள ஊதிய உயர்வு, சுலுகைகள் பற்றிய அறிவிப்புகள் கீழ்க்கண்டவாறு வெளி வந்துள்ளது. புதிதாக நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்குத் தற்போது வழங்கப்படும் மாத தொகுப்பு ஊதியமாக 3,000 ரூபாயை, இனி 4,000 ரூபாயாகவும், எடையாளர்களுக்கு வழங்கப்படும் மாத தொகுப்பூதியத்தை 2,500 ரூபாயிலிருந்து 3,500 ரூபாயாகவும் உயர்த்தியும், இவர்களின் தொகுப்பூதியம் பெறும் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதை ஓராண்டாக குறைத்தும், ஓராண்டிற்குப் பிறகு விற்பனையாளர்களுக்குக் கால முறை ஊதியமாக ரூ.3,300, ரூ.8,000 என்ற ஊதிய விகிதமும், எடையாளர்களுக்கு ரூ.3,000, ரூ.7,000 என்ற ஊதிய விகிதமும் வழங்கிடவும்; இதுதவிர, சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப்படியாக மாதம் 1000 ரூபாயும்; இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு கூடுதலாக நியாயவிலைக் கடைப்படியாக 750 ரூபாயும்; எடையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மாதம் 500 ரூபாயும், இதர பகுதிகளில் மாதம் 250 ரூபாயும் வழங்கிடவும் முதலமைச்சர் கலைஞர் ஆணை யிட்டுள்ளார்.

 மேலும் இப்பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல அக விலைப்படி வழங்கிடவும், அடிப்படை ஊதியத்தில் 2.5 சதவீதத்தொகை ஆண்டு ஊதிய உயர்வாக அளித்திடவும், 15 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு, முறையே தேர்வுநிலையில் ஊதிய உயர்வு அளித்து ஊதியம் நிர்ணயம் செய்திடவும், அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம், வீட்டு வாடகைப் படியாகவும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நகர ஈட்டுப் படியாக அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதமும், இதர மாநகராட்சிப் பகுதிகளில் 4 சதவீத மும் நகர ஈட்டுப்படியாக வழங்கிடவும், இத்துடன், கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் - உயரிய மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தியும் முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையின்படி திருத்தப்பட்ட ஊதியங் களை 1.1.2010 முதல் நடைமுறைப்படுத்தி, அதன் பணப்பயன் 1.1.2011 முதல் வழங்கப்படும். இதன்மூலம் 23 ஆயிரத்து 377 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனை யாளர்கள் மற்றும் எடையாளர்கள் பயன்பெறுவார்கள். என்று அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. - என்பதே அந்த அறிவிப்புகள். ம்ம்ம் ஜெயலலிதாவின் 2001 - 2006 ஆட்சிக் காலத்தில் கூட்டுறவுத்துறை எவ்வாறெல்லாம் சீரழிந்தது. அதனால் விவசாயிகள் பட்டபாடு என்ன

அதுபற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:- அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு என்றாலே கூட்டுக் கொள்ளைஎன்று மக்கள் சொல்லி முகம் சுழிக்கிற நிலை ஏற்பட்டது. கிராமப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் கூட்டுறவு அமைப்புகள் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் சீரழிக்கப்பட்டு விட்டன. தமிழகத்திலுள்ள 4000க்கும் மேற்பட்ட கிராம கூட்டுறவு வங்கிகளும், 14 கூட்டுறவு நூற்பாலைகளும், 12 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் திறமையற்ற நிர்வாகக் குளறுபடி களின் காரணமாகவும், ஆளுங்கட்சியினரின் தலையீட்டின் காரணமாகவும் நொடிந்த நிலைக்குத் தள்ளப்பட்டு மூடுகிற நிலையில் உள்ளன. மதுரை நகர கூட்டுறவு வங்கியைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி யின் நிதிநிலை சீரழிந்ததையடுத்து அதன் கணக்குகளை முடக்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் வங்கியில் ரூ.1000க்கு மட்டும் வரவு - செலவு கணக்குகள் மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்குமேல் எந்தவித வரவு - செலவு கணக்கிற்கும் அனுமதி இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது. சிவகங்கை மாவட்டக் கூட்டுறவு வங்கியின் நொடிந்த நிலையின் காரணமாக ரிசர்வ் வங்கி விதித்த தடைக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் வஞ்சக எண்ணமே காரணம்என்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டி பேசியது பிரச்சினையைத் திசை திருப்புகிற முயற்சியாகும். சிவகங்கைக் கூட்டுறவு வங்கி யைப்போல, விருதுநகர், தர்மபுரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டக் கூட்டுறவு வங்கிகளும் முடப்படுகிற அபாயம் ஏற்பட்டுள்ளதை ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை. இதைத் தொடர்ந்து 4000க்கும் அதிகமான கூட்டுறவு வங்கிகளும் மூடப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை என்று சொன்னாலே ஊழல், முறைகேடுகள், ஊதாரித்தனம், திறமை யின்மை ஆகியவைதான் நம் கண்முன்னே வந்தது.  இதன் காரணமாகப் பல ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூபாய் 33 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்ததால் முதலீட்டாளர்களின் நலன்களைக் காப்பாற்றுகிற நோக்கத்தில்தான் ரிசர்வ் வங்கி தலையிட ஆரம்பித்தது. இந்த வங்கியில் மட்டும் வாராக் கடன் ரூ.75 கோடிக்கு மேல் இருந்தது. வாராக் கடனை வசூலிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது.  ஆளுங்கட்சியினரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்பட்ட கடனில் பெரும்பகுதி வாராக் கடனாக இருப்பதால் இந்தப் பொறுப்பை அ.தி.மு.க. அரசுத் தட்டிக் கழித்து வந்தது. நான்கு ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு ஐந்து அமைச்சர்கள் மாறி மாறிப் பொறுப் பேற்றுள்ளனர். கூட்டுறவுத்துறையில் ஏற் பட்டுள்ள குழப்பத்திற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை. கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்படாததற்குக் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து பல்லவி பாடி வந்தது. நீதி மன்ற வழக்கை விரைவு படுத்துவதற்கு தமிழக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயக் கூட்டுறவுக் கடன்களுக்கான ரூபாய் 311 கோடி வட்டித் தள்ளுபடி என்று (தினத்தந்தி 14.6.2001) ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி தவணை கடந்த அசல் தொகையும், கட்ட வேண்டிய தவணைத் தொகையும் 31.8.2001க் குள் செலுத்தினால் 30.6.2000 நிலவரப்படி அவர்கள் கட்ட வேண்டிய முழு வட்டி மற்றும் அபராத வட்டியை அவர்கள் சார்பாக, தமிழக அரசே ஏற்றுக்கொண்டு அதற்கு ஈடானத் தொகையைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப் புகளைப் பல முறை முதலமைச்சர் செய்துள்ளார். இத்தகைய அறிவிப்புகளினால் பயனடைந்த விவசாயி களின் பட்டியலை வெளியிட இல்லை. விவசாயிகள் வாங்கிய அசல் தொகையை ஒரே நேரத்தில் முழுவதுமாகக் கட்டிவிட்டால் வட்டியும், அபராத வட்டியும் தள்ளுபடி செய்யப் படுவது ஒன்றும் புதிதல்ல. தேசிய மய மாக்கப் பட்ட வங்கிகளில்கூட இதைவிட கவர்ச்சிகரமான திட்டங்கள் உள்ளன. அதன் படி ஒரே நேரத்தில் (டீநே கூiஅந ளுநவவடநஅநவே) வங்கி கூறுகிற குறிப்பிட்ட தொகை செலுத் தினால் நிறைய சலுகைகளைத் தருகிறார்கள். ஆனால் ஜெயலலிதா அரசு இத்தகைய கடன் தள்ளுபடி அறிவிப்புகளை நான்கு ஆண்டு களில் பலமுறை செய்துள்ளது. ஆனால் விவசாயிகள் வறுமையில் உழன்று வாழ்க்கை யைக் கழிப்பதே சிரமமாக உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெறும் கண் துடைப்பாகவும், விளம்பரத்திற்காகவும் மட்டுமே பயன்படும். இதனால் வேறு பயன் விவசாயிகளுக்கு ஏற்படாது. கடன் சுமையிலிருந்து விவசாயிகளுக்கு முற்றிலும் விடுபடு வதற்கு அடிப்படையான, நடைமுறையில் சாத்தியம் உள்ள எந்த முயற்சியையும் ஜெய லலிதா அரசு மேற்கொண்டதில்லை. ஜெயலலிதா ஆட்சியில் கூட்டுறவுத்துறை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்ட பிறகு, அதைத் தோண்டி மீட்டெடுக்கிற பொறுப்பு கலைஞர் தலைமையிலேயே அமையவிருக்கிற ஆட்சிக்கு இருக்கிறது. அந்த வகையில்தான் தி.மு.கழகத்தின் சார்பாகச் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலே விவசாயிகளின் கடன் தொல்லைக்கு நிரந்தர முடிவு கட்டுகிற வகையில், ""விவசாயிகள் வேதனை தீரக் கூட்டுறவுக் கடன்கள் அறவே தள்ளுபடி"" என்ற துணிச்சலான, இதுவரை எந்த ஆட்சியும் எடுக்காத முடிவை அறிவித்துள்ளது. மேலும் கூட்டுறவுத்துறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப் பட்டு அதிகாரவர்க்கத்தின் கோரப் பிடியி லிருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்கிற மக்களின் எதிர் பார்ப்பை 2006 - தேர்தலில் வெற்றி பெற்று 5வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விவசாயி களின் கடன்சுமை - 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து, விவசாயிகளை கடன் சுமையிலிருந்து விடுவித்தார். ஆனால் தனது ஆட்சிக்காலத்தில் டான்சி தவிர வேறு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறி - முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைக்க முயலுகிறார். இது மக்களிடம் எடுபடுமா - எடுபடாது; எடுபடாது!
 நன்றி:முரசொலி 30-12-2010  


No comments:

Post a Comment