Search This Blog

Wednesday, 19 January 2011

வெங்காய விலை உயர்வும் தமிழக அரசு படைத்த முன்னுதாரணமும்!

    
மற்ற உணவு தானியங்களைப் போலவே வெங்காயத்தின் விலையும் கடந்த சில நாட்களில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து விட்டது. விலைவாசி உயர்வு இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது. விண்ணை முட்டிக் கொண்டு போகிறது என்று மற்ற பண்டங்களின் விலை உயரும் போதெல்லாம் சொல்வது வழக்கம். அதை உண்மை தான் என்று எல்லோரும் ஆமோதிக்கும் வகையில் இப்போது வெங் காயத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து இருக்கிறது.  இந்த விலை உயர்வுக்கு காரணம் என்ன? தமிழ்நாடு வியாபாரிகளைப் பொறுத்தவரையில் வெங்காய விலை உயர்வுக்கு கூறும் காரணம், பொதுவாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் பாவூர்சத்திரம், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, வத்தலகுண்டு, பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்தும் தினமும் 70 லாரிகளில் வெங்காயம் வந்து இறங்கும். ஆனால் மழையின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் வெங்காயம் விளையவில்லை. 

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் தற்போது 30 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து இறங்குகிறது. வெங்காயவரத்து குறைந்ததின் காரணமாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும் பகுதிகளில் அதிக மழை பெய்ததால் வெங்காயம் அழுகிவிட்டது. இதன் காரணமாக குறைவான வெங்காயமே மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் உற்பத்தி அதிகரித்து மார்க்கெட்டுக்கு வந்தால்தான் விலை குறையும் என்று தமிழக வெங்காய வியாபாரிகள் சார்பில் சமாதானம் கூறப்படுகிறது. எனினும் எதிர்க்கட்சிகள் பலவும் இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு ஏதோ அரசாங்கம் தான் காரணம் என்பது போல இந்தப் பிரச்சினையால் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் இதனை பெரிதுபடுத்தி வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் வெங்காய விலை உயர்வை வாயாலே வெளியில் எதிர்க்கிறார்களே தவிர, அவர்கள் மனசுக்குள் எல்லாம் வெங்காயம் இன்னும் விலை உயர வேண்டும், சட்டமன்றத் தேர்தல் வரையில் விலை உயர்ந்து கொண்டே போகவேண்டும். அப்போது இந்த வெங்காய விலை உயர்வை வைத்து ஆளும் கட்சியை தோற்கடித்து விட முடியும் என்கிற நப்பாசை மேலோங்கிக் கிடக்கிறது. இதற்கு அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையும் நினைத்துப் பார்க்கிறார்கள். அது என்ன? 1998-ல் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அப்போது டெல்லி யில் பா.ஜ.க. ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஒரு கிலோ 7 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் கிலோ 20 ரூபாய் என்று விலை உயர்ந்து இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. அப்போது நடந்த தேர்தலில் வெங்காய விலை காரணமாகவே பா.ஜ.க. ஆட்சி கவிழ்ந்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதனை மனதில் வைத்துக்கொண்டுதான் எதிர்க்கட்சியினர் இப்போது வெங்காய விலை உயர்வை பூதாகரமாக பெரிதுபடுத்தி விட முயற்சிக் கிறார்கள். ஆனால் வெங்காய விலை உயர்வு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ள விலைவாசி நிலவரம் அல்ல. 

தமிழகத்தில் வெங்காய விலை கிலோ 85 ரூபாய் என்பதாகத்தான் இருக்கிறது. அதே சமயம் கொல்கத் தாவில் கிலோ 60 ரூபாய்க்கும், டில்லியில் கிலோ  70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மொத்த விற்பனை யில் கிலோ 70 ரூபாய்க்கும் சில்லறையில் அதிகபட்சமாக நூறு ரூபாய் வரையிலும் உயர்த்தியே விற்கப் பட்டு வருகிறது. இந்த வெங்காய விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள், தவறான பொருளாதார குழுவை திறமையற்ற நிர்வாகம் உள்ளிட்டவைகளே காரணம் என்று கூறுகின்றன. எனினும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்காமல் இல்லை. அது பதுக்கலை தடுக்க அதிரடி சோதனைகளுக்கான ஏற்பாடு களை செய்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்திய மக்களுக்குத் தேவையான அளவு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்துள்ளது. விலை உயர்வுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். விலையை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகாரம் விவசாயத் துறை களின் செயலாளர்களுக்கு அவர் உத்தரவு இட்டுள்ளார். ஜனவரி 15 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசின் வேளாண் பொருட்கள் விலைகளை முறைப்படுத்தும் அமைப் பான ""நட்பெட்"" நேற்று முன்தினம் தடை விதித்துள்ளது.  இதுகுறித்து பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ""வெங்காய ஏற்று மதிக்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தேவைக்கும் சப்ளைக்கும் இடையே வேறு பாடு இருப்பது தெரிகிறது. சப்ளைக்கு உள்ள தடங்கல் என்ன என அரசு விசாரிக்கும். சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசுவேன்"" என்றார். மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் ""இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு விலை இப் படியே நீடிக்கக்கூடும். அதன் பிறகு விலை குறைந்துவிடும்"" என்றார். ஆகவே, வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய சர்கார் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வில்லை. அது சந்தை முதலாளிகளிடம் சரணடைந்து விட்டது என்று எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தது நூற்றுக்கு நூறும் உண்மை அல்ல. அது போலவே வெங்காய விலை தமிழகத்தில் மட்டும் தான் உயர்ந்துவிட்டது என்பது அல்ல.

நாடு முழுவதிலும் இக்கால கட்டத்தில் விலை தமிழகத்தைப் போலவே உயர்ந்துதான் இருக்கிறது என்பதையும் மேலே கண்ட தகவல்கள் உறுதி படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தமிழக அரசைப் பொறுத்தவரையில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் வெங்காய விலை உயர்வில் இருந்து பொது மக்களை காப்பாற்ற மின்னல் வேக நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு முன்னுதாரண மாகத் திகழ்கிறது. இதனை நாம் சொல்லவில்லை. தி.மு.கழகத்தையும், தமிழக அரசையும் நாள் தவறாமல் எதிர்ப்பதையே வாடிக்கையாக்கிக் கொண்டுவிட்ட ""தினமணி"" ஒரு செய்தி மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. அது என்ன செய்தி

தமிழகத்தில் வெங்காயத்தை கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது என்பதே அந்த செய்தி. அது வருமாறு :- சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறைக்குச் சொந்தமான கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.40க்கு விற்கப்பட்டு வருகிறது. வெங்காயம் விலை அதிகம் உள்ள மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெங்காயத்தின் விலை கடுமை யாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.40 வரை விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.60ஐ தாண்டி விற்று வருகிறது. விலை உயர்வு அடுத்த மூன்று வாரங் களுக்குத் தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை கடைகளில் விற்கப்பட்டு வரும் வெங் காயத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட சில இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளில் மட்டுமே இதுவரை வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை இறங்கு முகத்தில் இருந்தபோது கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது.  விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சென்னையில் வெங்காயம் விற்கப்படும் அனைத்து டி.யு.சி.எஸ். கடைகளிலும் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால், தேனாம்பேட்டை பெசன்ட் நகர், அசோக்நகர், செனாய்நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் உள்ள டி.யு.சி.எஸ். கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஸ்வரன்சிங் தெரிவித் துள்ளார். சாம்பார் வெங்காயம் கிலோ ரூ.35க்கும், பெங்களூர் வெங்காயம் (பல்லாரி) கிலோ ரூ.40க் கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.55க்கும் டி.யு.சி.எஸ். கடைகளில் விற்பனை செய்யப் படுகிறது. ஆனால், வெளிச்சந்தையில் செவ்வாய்க் கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ வெங்காயம் ரூ.65 வரை விற்கப்பட்டது. கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்

வெங்காயத்துக்கு இணையாக உருளைக் கிழங்கையும் கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் என்றும் ஸ்வரன் சிங் கூறினார். டி.யு.சி.எஸ். கடைகளில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்கு அளவு உண்டு. ஒருவருக்கு 2 கிலோ மட்டுமே அளிக்கப்படும். ஹோட்டல்களின் பயன்பாட்டுக்கோ, மொத்தமாக 5 அல்லது 10 கிலோ என்ற நிலையிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட மாட்டாது என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பல்லாரி வெங்காயம் நான்கு டன்னும், உருளைக் கிழங்கை 4 டன்னும் கொள்முதல் செய்து விநியோகிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) 2 டன்னும் கொள்முதல் செய்யப்படுகிறது. டி.யு.சி.எஸ். கடைகளுக்காக கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை இருப்பு வைக்க தனியான குளிர்பதனக் கிடங்கு இல்லை. இதற்கான மாற்று ஏற்பாடு செய்யவும் உணவுத் துறை நட வடிக்கை எடுத்து வருகிறது என்கிறார் ஸ்வரன் சிங். கொள்முதல் விலையுடன் போக்குவரத்துச் செலவு எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு விற்பனை செய்கிறோம். ஈரோடு, நாகர்கோவில் போன்ற நகரங்களில் வெங்காயத்தின் விலை சென்னை நகருக்கு இணையாக கடுமையாக உள்ளது. எனவே, அங்கெல்லாம் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவ தாக ஸ்வரன்சிங் தெரிவித்தார். - என்பதே தினமணிவெளியிட்டுள்ள அந்த நற்செய்தியாகும். ம்ம்ம் இந்தச் செய்தி உணர்த்தும் உண்மை என்ன? வெங்காயத்தின் விலை உயர்வுக்கு அரசாங்கம் காரணமல்ல; பற்றாக்குறையைப் பயன் படுத்தி பண்டங்களைப் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரிகளே காரணம் ; அதனால் தான் வெங்காயத்தின் விலை மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகிறது. தமிழக அரசால் மட்டும் கிலோ 40 ரூபாய் விலைக்கு வழங்க முடிகிறதே ; அது எப்படி? அந்த ரகசியத்தைத்தான் ""கொள்முதல் விலையுடன் போக்குவரத்து செலவு எவ்வளவு என்பதை கணக்கிட்டு அதன் அடிப்படையிலேயே குறைந்த விலையில் அதாவது வெளி சந்தைகளின் விற்பனை விலையைவிட பாதி அளவே விலை வைத்து விற்பனை செய்கிறோம்"" என்பதாக தமிழ்நாடு உணவு கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் ஸ்வரன்சிங் கூறினார். அதுதான் அந்த ரகசியம் என்பது மட்டு மின்றி தமிழக அரசின் சாதனை மகுடத்தில் இன்னொரு ஒளி வீசும் வைர கல்.      
நன்றி:முரசொலி 23-12-2010

No comments:

Post a Comment