பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அதை நடத்தப்பட்ட 23 நாட்களிலும் அவையை நடத்த முடியாமல் அமளி ஏற்படுத்தி முடக்கியது பா.ஜ.க., அதன் பின்னரும், பட்ஜெட் கூட்டத் தொடரையும் இது போலவே நடக்க விடாமல் முடக்குவோம் என்று அது அறிவித்து இருக்கிறது. எனினும், பட்ஜெட் கூட்டத் தொடரை வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி முதல் சச்சரவு அமளி களுக்கு இடம் இல்லாத வகையில் சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி களின் கூட்டத்தை கூட்ட முன் வந்திருக்கிறார் மக்களவைத் தலைவர் மீராகுமார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதாக பா.ஜ.க. தலைவி சுஸ்மா சுவராஜ் அறி வித்திருக்கிறார். எனினும் பா.ஜ.க. வுக்கே உரிய கலவர புத்தியின் அடிப்படையில் மக்களவைத் தலைவர் கூட்டுகிற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றாலும் நாடாளுமன்ற இரு அவையின் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையில் இருந்து பின் வாங்கிவிட மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டு இருக் கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் எவரும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. ""பொதுக் கணக்குக் குழு வெறுமனே கணக்கு வழக்குகளை மட்டுமே சரிபார்க்கும். அதன் விசாரணை வரம்பு மிக சிறியது. ஆனால் நாடாளுமன்ற கூட்டு விசார ணைக் குழுவின் வரம்பு அதிகம். இது வெறுமனே கணக்கு வழக்குகளை மட்டுமே பார்க்காது கூடுதலாக ஒவ்வொன்றுக் கும் உள்ள பொறுப்புகளை ஆராயும். பொதுக் கணக்குக் குழு பிரதமர் தவிர பிற அமைச்சர்களையும் விசாரிக்கலாம் என்று பிரதமர் கூறுவது தவறானது ஆகும். மக்களவை விதிகளின் படி பொதுக் கணக்கு குழு அமைச்சரை அழைத்து விசாரிக்க முடியாது. அப்படிப்பட்ட சூழலில் பிரதமர் தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறுவது அர்த்தமற்றது"" என்று அவர் விளக்கமளித்துள்ளார். ஆனால் அவரது கட்சியின் மேல்மட்ட தலைவர்களில் முக்கியமானவரும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷி சுஸ்மாவின் கருத்துக்கு மாறாக ‘பிரதமரை உரிய நேரத்தில் விசார ணைக்கு அழைக்க விரைவில் முடிவெடுப் பேன்’ என்று அறிவித்து இருக்கிறார். ஆக, பா.ஜ.க.வின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பொதுக் கணக்குக் குழுவின் அதிகாரங்களையே குறைத்து மதிப்பிடுகிறார். ஆனாலும் அவரது கட்சியை சார்ந்த முரளி மனோகர் ஜோஷியோ பிரதமரை உரிய நேரத்தில் பொதுக் கணக்குக் குழுவிற்கு வந்து விசாரணையில் கலந்து கொள்ளுமாறு உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்கிறார். அப்படியானால் பொது கணக்கின் மீது அதன் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பா.ஜ.க. வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரே என்றாலும் அந்த விசாரணையில் பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம் ஆகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வின் அதிகாரபூர்வமான கொள்கை என்ன? பொதுக் கணக்குக் குழு விசாரணையில் எந்தவித பயனும் இல்லை என்று கூறுகிற கட்சி தலைமைக்கு கட்டுப்படாமல் முரளி மனோகர் ஜோஷி பொதுக் கணக்கு குழுவை கூட்டி ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, எட்டு முறை கமிட்டி கூட்டத்தை கூட்டி ஆலோ சனை நடத்தியிருப்பதை பா.ஜ.க. தலைமை ஏன் கண்டிக்கவில்லை. முரளி மனோகர் ஜோஷி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைதான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷகீல் அகமது ஆணித்தரமாக கேட்டிருக்கிறார். இதுபற்றி பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- 2ஜி அலைக்கற்றை விற்பனை விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் விசாரிக்க வேண்டும் என்று கோரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அந்தக் கருத்தை ஏற்காமல் விசாரணையைத் தொடங்கிய நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரில் ஒருவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர் ஷகீல் அகமது. டெல்லி நிருபர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்த விவகாரத்தை பொதுக் கணக்குக் குழு (பி.ஏ.சி.) விசாரித்தாலே போதும் என்று அரசு தரப்பு கூறிவருகிறது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் பிற கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் (ஜே.பி.சி.) விசாரிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றன. இந்த நிலையில் பொதுக் கணக்குக் குழுவின் தலைவரும் பா.ஜ.க.வின் மூத்த தலை வருமான முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கி விட்டார். இந்தக் குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்கவும் தயார் என்று பிரதமர் மன்மோகன் சிங் பகிரங்கமாக அறிவித்து விட்டார். இந்த நிலையிலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. தலைவர்கள் விடாப்பிடியாக வலி யுறுத்துகின்றனர். எனவே அந்தக் கட்சித் தலைமை தார்மீக அடிப்படையில் இரண்டு முடிவில் ஏதாவது ஒன்று தவறானது என்று ஒப்புக் கொண்டு இரு தலைவர்களில் ஒருவரை ராஜிநாமா செய்யச் சொல்ல வேண்டும் என்றார் ஷகீல் அகமது. அப்படிச் சொல்லிவிட்டு, ""அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம், நாங்கள் எதையும் வற்புறுத்த முடியாது"" என்றார். பொதுக் கணக்குக் குழுவால் மத்திய அமைச்சரைக்கூட வரவழைத்து நேரில் தகவல் பெற முடியாது என்பதே நடைமுறை. சில சந்தர்ப்பங்களில் அமைச்சர் களாக முன்வந்து ஆஜராகியிருக்கிறார்கள். ""பிரதமரை அழைத்து விசாரிக்கும் அதிகாரம் இந்தக் குழுவு க்கு இல்லை"" என்றார் ஷகீல் அகமது. - என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க பொதுக் கணக்குக் குழு முன்பு அமைச்சர்கள் யாரும் ஆஜராக விதிமுறைகளில் இடமில்லை. அமைச்சர்களை பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகும் படி உத்தரவிட அதற்கு அதிகாரம் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங் இதுபற்றி அறிவித்துள்ளது அர்த்தமற்றது’ என்று சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டு இருக்கிறாரே அதுவாவது சரியா. அமைச்சரை விசாரணைக்கு அழைக்க விதிகளில் இடமில்லை என்றாலும் 40 ஆண்டு களுக்கு முன்பு அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். மக்களவைத் தலைவரின் விசேஷ அனுமதி பெற்று அப்போது அமைச்சர் ஆஜராக வழி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மக்களவை தலைவரின் விசேஷ அனு மதியின் பேரில் பிரதமரோ அவரது அமைச்சர்களோ பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகி விசாரணை யில் கலந்து கொள்ளலாம் என்பது முன் உதாரணமாக இருந்து வருகிறது. ஆகவே பொதுக் கணக்குக் குழு அமைச்சர் எவரையும் தன் முன் ஆஜராகும் படி அழைப்பு விடுக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று சுஸ்மா சுவராஜ் கூறியிருப்பதுதான் அர்த்தமற்றதே தவிர பிரதமர் கூறிய விளக்கம் அர்த்தம் உள்ளது தான். நூற்றுக்கு நூறு சரியானவைதான்! ஆகவே நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும். அப்போது தான் பிரதமரை அழைத்து விசாரிக்க முடியும் என்று பா.ஜ.க.வினரும் எதிர்க்கட்சிகளும் இதுவரை கூறி வந்த அந்த ஒரே காரணத்தையும், பிரதமர் மன்மோகன் சிங் பொதுக் கணக்குக் குழுவில் ஆஜராக நான் தயார் என்று முரளி மனோகர் ஜோஷிக்கு கடிதம் எழுதியிருப்பதும் ஜோஷி அதை ஏற்றுக் கொண்டிருப்பதும், பா.ஜ.க.வினருக்கு மரண அடியாக விழுந்து அவர்களது ஒரே வாதமான பொதுக் கணக்குக் குழுவிற்கு பிரதமரை அழைக்க அதிகாரம் இல்லை. நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே அப்படி அழைக்க முடியும் என்பதும் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டது. இனியும் நாடாளு மன்றத்தை முடக்குவோம் என்று அவர்கள் கூற முடியுமா? முடிவே முடியாது.
நன்றி:முரசொலி 30-12-2010
No comments:
Post a Comment