Search This Blog

Thursday 20 January 2011

விலைவாசி உயர்வதற்கும் சரிவதற்கும் யார் காரணம்? பாலபாரதி கேள்வியும், பேராசிரியப் பெருந்தகை, பீட்டர் அல்போன்ஸ் விளக்கங்களும்!


விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? இந்த கேள்விக்கு பதில் அளிக்க யாராலும் முடியவில்லை. இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும்கூட விலைவாசிகள் இறக் கைக் கட்டி கொண்டு விண்ணில்தான் பறக்கின்றது விலைவாசி. இடதுசாரி மாநிலங்களில் மட்டும் விலைவாசி என்ன அன்ன நடையா போடுகின்றன? இல்லையே? கேரளத்திலும், மேற்குவங்கத்திலும் அனைத்து மாநிலங்களை போலவே விலை வாசிகள் விண்ணில் பறந்தாலும் கம்யூனிஸ்ட்கள் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஆளும் மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகள் விலைவாசியை எதிர்த்து போராட்டம் நடத்தினால் விட்டுவிட மாட்டார்கள். அப்போது ஆன்லைன் வர்த்தகம் பற்றியோ அந்நிய முதலீடுகள் பற்றியோ ஏற்றுமதி - இறக்குமதி பற்றியோ அவர்களுக்கு கிஞ்சிற்றும் கவலை ஏற்படாது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை எப்படி நசுக்குவது என்பதி லேயே தீவிரம் காட்டுவார் கள் அவர்கள். கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது தமிழ்நாட் டில் தக்காளியும், முருங்கைக்காயும், பாமாயி லும் விலை அதிகமாகிவிட்டது என்பதில் ரொம்பவே அக்கறை அதிகமாகியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பற்றி விவாதம் நடந்தபோது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பாலபாரதி பேசியபோது,

""கிலோ கணக்கில் காய்கறிகள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒரு தக்காளி ரூபாய் மூன்றுக்கும், ஒரு முருங்கைக்காய் ரூபாய் பதினைந்துக்கும் மக்கள் வாங்கி செல்கின்றனர். பறக்கும் பாமாயில் விலை. துரத்தும் துவரம் பருப்பு விலை போன்று கம்யூனிஸ்ட்கள் மட்டும் கூறவில்லை. எல்லோரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்"" என்று நக்கலும், நையாண்டியும் பொங்கிட குறிப்பிடுகிறார். அவர் சொல்லாமல் விட்டது. இதுதான்! எங்கள் மேற்கு வங்கத்தில் ஒரு கட்டு முருங்கைக்காய் ஒரு ரூபாய்தான். துவரம் பருப்பின் விலை சரிந்து வாங்குவார் இன்றி, துவரம் பருப்பு சந்தையில் சந்தி சிரிக்கிறது. தக்காளி சங்கதி எப்படி என்று தெரியுமா? ஒரு கூடை தக்காளி பத்து ரூபாய்தான் என்று பாலபாரதியால் சொல்ல முடியவில்லை. சொல்ல மாட்டார். காரணம் அவர்கள் ஆட்சியிலும் விலைவாசிகள் விண்ணைத் தொட்டதோடு இல்லாமல் சந்திர மண்டலத்திலும் கொடி நாட்ட முயற்சித்துக் கொண்டு இருக்கிறது.

அதனால் தான் சட்டமன்றத்தில் யார் பேசும் போதும் பெரும்பாலும் குறுக்கிட விரும்பாத நிதியமைச்சர் இனமான பேராசிரியர் அவர்கள் பாலபாரதியின் பேச்சில் குறுக்கிட்டு விலைவாசி பற்றி சில வினாக்களை எழுப்பி விளக்கம் கேட்டிருக்கிறார். பேராசிரியர், ""விலைவாசி உயர்வு குறித்து எனது ஆழ்ந்த வேதனையை நானும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த விலை உயர் வுக்கு காரணமான பதுக்கல் முதலாளிகள் யார்? வெங்காய வியாபாரிகள் யார்? என்பதை மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் சொன்னால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விலைவாசியை குறைப்பதற்கு அது வசதியாக இருக்கும். வெளிநாடுகளில் இருக்கும் சட்டங்கள் காரணமாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளதை யும் நாம் பார்த்துக்கெண்டு இருக்கிறோம். பூகம்பம், கடும் மழை, பெரும் வறட்சி ஏற்பட்டால் யாரை குறை சொல்ல முடியும். அது போலத்தான் விலைவாசி உயர்வும். இதற்காக யாரை கண்டிப்பது. விலைவாசியை குறைக்க வழிகள் இருந்தால் கம்யூனிஸ்ட்கள் அரசுக்கு கூறலாம்"" இதற்கு நேரடியாக திட்டவட்டமாக எந்த பதிலையும் கூறமுடியாத பாலபாரதி ""விவசாய உற்பத்திப் பொருள்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படுவதால் இந்த விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது.

 மத்திய அரசு வெங்காயத்தை ஏற்றுமதிக்கு அனுமதித்த தும் ஓர் காரணமாகும்"" என்றார். அப்போது கம்யூனிஸ்ட்களின் இரட்டை வேடத்தை முகத்திரை கிழித்து காட்டுவது போல காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் எழுந்து ""வெங்காய விலைவுயர்வுக்கு காரணம் மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைதான் என்று உறுப்பினர் பாலபாரதி இங்கே குறிப் பிட்டார். நேற்று (ஜனவரி 11 தேதி அன்று) மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காய ஏற்று மதிக்கு தடை விதிக்காதே. உடனடியாக தடையை நீக்குக என்று கோரி வெங்காய ஏற்றுமதிக்கு ஆதரவாக விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஏற்றுமதிக்கு தடை விதித்தால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்துகிறார்கள்.
ஆனால் கம்யூனிஸ்ட்களோ ஏற்றுமதிக்கு அனுமதித்த தால் தான் விலை வாசி உயர்ந்துவிட்டது என்று கூறி போராட்டம் நடத்துகிறார்கள். இது கம்யூனிஸ்ட் களின் இரட்டை நிலையை காட்டுகிறது"" என்று குறிப்பிட்டார்.
 அதுமட்டுமின்றி விலை உயர்வை கட்டுப்படுத்த மேற்கு வங்கத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்பதையும் அவர் கூறியிருக்கலாமே என்றார். இப்படி பாலபாரதிக்கு பீட்டர் அல்போன்ஸ் இன்னும் ஒருபடி மேலே போய், ""சீனாவின் பட்டினிச் சாவு, ராணுவ வீரர்கள் துணையுடன் இலங்கையில் வெங்காய விற்பனை. ரஷ்யா, அமெரிக்காவில் வறுமை, விலை உயர்வு என்று செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இது எதனை காட்டுகிறது! விலைவாசி உயர்வு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும் அல்ல பல்வேறு நாடுகளிலும் உள்ளதுதான். ஆனால் விலைவாசி உயர்வை கம்யூனிஸ்ட்கள் அரசியலாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்"" என்று குற்றம்சாட்டினார். இவைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், விலைவாசிகள் குறிப்பாக காய்கறிகள், மளிகை சாமான்கள் ஆகியவற்றின் விலைகள் அடிக்கடி உயர்வதற்கும், மலிவாகி விலை சரிவதற்கும் என்ன காரணம் என்பதை அவ்வப்போது வியாபாரிகள் விளக்கியபடியே இருக்கிறார்கள்.

உதாரணமாக - இந்த ஜனவரி மாதம் 8ந் தேதி சனிக்கிழமை வந்த ‘தினகரன்’ நாளேட்டில் கிலோ ரூ.80ஆக உயர்வு வெங்காயம் விலை மீண்டும் விர்ர்... என்ற தலைப்பிட்டு ஒருசெய்தி வந்தது.  அது வருமாறு:- கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காளம் விலை மீண்டும் உயர்ந்து கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ரூ.120க்கு விற்கப்படுகிறது.  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் காய்கறிகள் வரும். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து 40 லாரியில் வந்த பெரிய வெங்காயம், 30 லாரியாக குறைந்ததால் அதன் விலை மீண்டும் உயர்ந்தது. கிலோ ரூ.60க்கு விற்ற பெரிய வெங்காயம் நேற்று ரூ.80 க்கு விற்பனை ஆனது. ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்தும், குஜராத் மாநிலம் பரோடாவில் இருந்தும், முருங்கைக் காய் வரும். பரோடாவில் இருந்து 3 லாரியில் வந்த முருங்கைக்காய் இப்போது ஒரு லாரியாக குறைந்துவிட்டது. இதனால், கிலோ ரூ.90க்கு விற்ற முருங்கைக்காய் தற்போது ரூ.120ஆக உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகள் விலை விவரம் (கிலோ) சின்ன வெங்காயம் - ரூ.45 கேரட் - ரூ.30 பீட்ரூட் - ரூ.18 முள்ளங்கி - ரூ.12 சவ்சவ் - ரூ.10 கத்தரிக்காய் - ரூ.20 வெண்டைக்காய் - ரூ.38 பீன்ஸ் - ரூ.30 அவரைக்காய் - ரூ.32 தக்காளி - ரூ.25 கோஸ் - ரூ.15 பாகற்காய் - ரூ.25 உருளைக்கிழங்கு - ரூ.18 - என்பதே அந்தச் செய்தி. இதில் விலை உயர்வு ஏன் என்பதற்கான விளக்கத்தையும் வியாபாரிகள் கூறியிருக்கிறார்கள். இரு தினங்களுக்கு பின்னர் வெளிவந்த அதே தினகரனில் ‘தக்காளி, கேரட் விலை சரிந்தது’ என்ற தலைப்பிட்டு ஒரு செய்தி வந்தது.

அது வருமாறு :- ""கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி, கேரட் விலை குறைந்தது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் காய்கறி வருகிறது. சமீபத்தில் பெய்த மழையில் பயிர்கள் நாசமாகி காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்தது. தற்போது வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஊட்டி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து நேற்று 8 லாரி கேரட் வந்தது. இதுவரை கிலோ ரூ.30க்கு விற்ற கேரட் இப்போது ரூ.18ஆக குறைந்தது. ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து 50 லாரிகளில் தக்காளி வந்தது. கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி ரூ.25ஆக குறைந்தது. மற்ற காய்கறி விலை (கிலோவுக்கு) கத்தரிக்காய் - ரூ.10 கோஸ் - ரூ.12 பீட்ரூட் - ரூ.12 நூக்கல் - ரூ.12 பீன்ஸ் - ரூ.25 அவரைக்காய் - ரூ.25 வெண்டைக்காய் - ரூ.22 சவ்சவ் - ரூ. 7 பாகற்காய் - ரூ.15 உருளைக்கிழங்கு - ரூ.15 சேனைக்கிழங்கு - ரூ.18 சேப்பங்கிழங்கு - ரூ.12 பெரிய வெங்காயம் - ரூ.55 சின்ன வெங்காயம் - ரூ.40 - என்று அந்தச் செய்தி - விலைவாசி குறைந்த தற்கான விளக்கத்தையும் அளித் திருக்கிறது. இவைகள் எல்லாம் காட்டும் உண்மை என்ன? - புயல், வெள்ளம், மழையால் பயிர் களுக்கு பாதிப்பு, அழிவு ஏற்பட்டால் விலை உயரும். - பொருள்கள் உற்பத்தியாகும் இடங்களி லிருந்து லாரி போக்குவரத்து குறைந்தால் விலை உயரும். - தீபாவளி, பொங்கல், பிள்ளையார் சதுர்த்தி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் ரம்ஜான், போன்ற பண்டிகைக் காலங்களில் காரணம் எதுவும் இல்லாமலே விலை உயரும். அதேபோல், நல்ல விளைச்சல், பொருள் களின் வரத்து, அதிக லாரிகளில் சந்தைக்குப் பொருள்கள் வருவது போன்றவற்றால் விலை குறையும் சரியும் என்பதுதானே? வேறு என்ன?


ன்றி:முரசொலி 15-01-2011

No comments:

Post a Comment