அப்பாடி! கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆசை நிறைவேறிவிட்டது. இத்தனை நாளும் அவர் களை ஏறெடுத்தும் பார்க்காமல் அலட்சியப் படுத்தி வந்த ஜெயலலிதா இப்போது, சட்டமன்றத்தில் ஆளுனர் உரை நிகழ்த்திய போது, அ.தி.மு.க.வினர் நடத்திய அராஜகங் கள், அட்டூழியங்கள் ஆகியவற்றை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தோளோடு தோள் நின்று ஆதரித்ததையும், அவைக் காவலர்களை அ.தி.மு.க.வினர் தாக்கியதையும், முகத்திலும், மார்பிலும் ஓங்கி ஓங்கி குத்தி தாக்கியதையும், அவைக்கு வெளியே பேச்சு, பேட்டி, போட்டிக் கூட்டம் ஆகி யவை போன்ற நகைப்புக்குரிய - அதேசமயம் காலிதனத்துக்கு நிகரான கலவரங்களையும் பலமாக கம்யூனிஸ்ட்டுகள் ஆதரித்து நின்றதையும் கண்ட ஜெயலலிதா, இனியும் இவர்களை நாம் மதிக்காமல் இருக்கக் கூடாது. இவர்கள் ரொம்பவும் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். நமது கட்சியின் ஏவலாட்களாக நடந்து கொள் வார்கள். நாம் தலையால் இட்ட உத்தரவுகளை அவர்கள், தங்களது முணுமுணுப்பைக் கூட காட்டாமல் நிறைவேற்றித்தர பாடுபடுவார்கள் என்று நினைத்து கம்யூனிஸ்டு கட்சியினர் பால் தனது கருணை பார்வையை திருப்பியிருக்கிறார்.
இது கம்யூனிஸ்டுகளுக்கு வரலாறு காணாத மகிழ்ச்சியை வாரி வழங்கியிருக்கிறது. அவர்கள் ஆஹா அம்மாவுக்கு வன்முறை என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதனால் சட்டசபையில் அம்மாவின் கவனத்தை நம்பக்கம் திருப்பவும், அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெறவும் நாம் அ.தி.மு.க. வினருடன் சேர்ந்து கொண்டு அவையிலும், வெளி யிலும் நிகழ்த்தியகளே பரங்கள், கலகங்கள், அமளிகள் அம்மாவை -அம்மாவின் திருப் பார்வை நம்மீது திரும்ப வைத்து விட்டது என்ற சந்தோஷம் உச்சம் தலைக்கேற உவப்பில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள்.
‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பற்றி பேச வாருங்கள்’ என்ற இரு கம்யூனிஸ்ட்டு கட்சிகளுக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினமணி பத்திரிகை கூட இடதுசாரிகளை தேர்தல் கூட்டணிக்காக வருமாறு ஜெயலலிதா விடுத்த அழைப்பை அந்தக் கட்சிகளின் மீது ஜெய லலிதா கொண்டுள்ள மதிப்பின் காரணமாக விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல அது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு கிட்டும் என்ற நெஞ்சு கொள்ளாத ஆசையுடன் ஜெயலலிதா கால் கடுக்க காத்து நின்றார். அவரது ஆசை நிறைவேறாது என்பதை சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கே ‘தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருக்கிறது அது தொடரும்’ என்று பகிரங்கமாகவே அறிவிப்பு செய்ததின் மூலம் நிராசையாக, நிறைவேற முடியாத ஆசையாக ஆகி விட்டது. அதன் பிறகே வேறு வழியில்லாத ஜெயலலிதா, இடதுசாரிகளுக்கு கூட்டணி பற்றி பேச அழைப்பு விடுத்திருக்கிறார்.
மற்றபடி இந்த கட்சியினரின் பலத்தையோ மக்கள் செல்வாக்கையோ மதித்து அல்ல, அல்லவே அல்ல என்பதை தெளிவாக்கும் வகையில் தினமணி எழுதியுள்ள செய்தி விமர்சனம் வருமாறு :
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி பேச வருமாறு இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் , இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால் ஏப்ரல் 27 மற்றும் ஜூலை 5 என இருமுறை அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டங்களுக்கு அ.தி.மு.க.வும் ஆதரவு அளித்தது. இதேபோல், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ச்சியான கூட்டுப் போராட்டங் களை நடத்த கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சித்தன. எனினும், மாநில தி.மு.க. அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நேரடி போராட்டங்களை நடத்த ஆர்வம் காட்ட வில்லை. கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா கலந்து கொண்ட பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்களை அ.தி.மு.க. நடத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் தி.மு.க. அரசுக்கு எதிராகவே நடத்தப்பட்டன. இதற்கிடையே மதுரை ஆர்ப்பாட்டத்துக்கு முன்பாக கடந்த செப்டம்பர் 26ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதா வைச் சந்தித்தனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராட்டங் களை நடத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுபற்றி மதுரை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் (அக்.18) முடிந்தபின் பரிசீலிக்கலாம் என்று அவர்களிடம் ஜெயலலிதா தெரிவித்ததாக அப்போது கூறப்பட்டது. எனினும், மதுரை ஆர்ப் பாட்டத்துக்குப் பிறகும் கூட்டுப் போராட்டம் பற்றி அ.தி.மு.க. தரப்பிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தத் தகவலும் இல்லை. இதற்கிடையே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். இதனால், மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் பெற்றால், மத்திய அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கத் தயார் என்று கடந்த நவம்பர் 11ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவின் இந்த ஆதரவு அறி விப்புக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதன் பிறகு 2ஜி அலைக்கற்றை ஊழலை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கம் நடத்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்தன. சென்னையில் அ.தி.மு.க. உள் ளிட்ட எதிர்க்கட்சிகளை அழைத்து பெரிய அளவில் பேரணி நடத்தவும் அக்கட்சிகள் தீர்மானித்தன. எனினும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து அ.தி.மு.க. தீவிரமாக ஆராய்ந்து கொண் டிருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டுப் பேரணி நடத்துவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்ட வில்லை என்று கூறப்பட்டது. கடந்த ஜனவரி 30ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஜெயலலிதா கூறினாரே தவிர, ஏற்கனவே கூட்டணியில் உள்ளதாகக் கூறப்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவது பற்றி எதுவும் கூற வில்லை. நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வுடன், அ.தி.மு.க. தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.வுடன் உடனடியாக பேசுவதை அ.தி.மு.க. தவிர்ப்ப தாகவும் அப்போது பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக அறிவித்து விட்டுச் சென்றார். தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையேயான கூட்டணி முறிய எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை இருகட்சிகளும் உறுதியாக தெரிவித்து விட்டன.
இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இருகட்சிகளை யும் கூட்டணி பற்றி பேச வருமாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். இதை மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சென்னை யில் திங்கள்கிழமை உறுதி செய்தார். தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் அணிக்கு எதிராக ஒரு உறுதியான அணியை நாமெல் லாம் சேர்ந்து அமைக்க வேண்டும் என்று தன்னிடம் தொலைபேசி மூலம் ஜெயலலிதா கூறியதாக பிரகாஷ்காரத் தெரிவித்தார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் ஜெயலலிதா தொலை பேசி யில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் தெரிவிக்கின்றனர். - என்பதாக செய்தி விமர்சனம் வெளியிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும் என்ன? ""மதியாதார் தலைவாசல் மிதியாதீர்"" என்று நமது முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் சொன்ன முதுமொழிகளை பத்து சீட்டுக்காக மானம் மரியாதை எதையும் இழந்துவிட எப்போதும் காத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் மதிக்கவா போகிறார்கள். அவர்கள் தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று ஆர்ப்பரித்து , 1991 - 1996 2001 - 2006 ஆகிய காலகட்டங்களில் தொடர்ந்து காட்டாட்சி நடத்திய ஜெயலலிதாவின் பாதார விந்தங்களில் சரணாகதி அடைய படாதபாடு படுகிறார்கள்! அதனால்தான் - உதைத்த காலுக்கு முத்தமிடத்துடிக்கிறார்கள்!
நன்றி:முரசொலி 13-01-2011
No comments:
Post a Comment