Search This Blog

Thursday 20 January 2011

கோபாலபுரத்து யானையைக் கடிக்கப் போகிறேன் என்கிறது கூவம் நதிக்கரை கொசு!


 விழுப்புரத்தில் பொங்கல் விழா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விஜயகாந்த் ""கருணாநிதியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்"" என்று கொக்கரித்து இருக்கிறார். விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தேர்தல் 2006 தமிழக சட்ட மன்றத் தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் அவர் வரலாறு காணாத வகையில் தமிழக சட்டமன்றத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். 150-க்கு மேற்பட்ட தொகுதிகளில் அவரது கட்சி டெப்பாசிட்டையே பறிகொடுத்தது. மீதம் உள்ள தொகுதிகளில் ஒரு தொகுதி தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வியது. ஜெயித்த தொகுதி விருத்தாசலம். தப்பித் தவறி அதிலே ஜெயித்து விட்டவர் விஜயகாந்த். எனினும் கலைஞர் மீது கொண்ட பரம்பரை துவேஷம் காரணமாக அவரை ஏதோ புதிய வரலாறு படைத்த வெற்றி வீரர், சாதனையாளர் என்பதுபோல பார்ப்பன பத்திரிகைகள் வலிந்து எழுதி அவரது நாடாறு மாசம் - காடாறு மாசம் - அதாவது ஆண்டின் முக்கால் பகுதி சினிமா வில் நடிக்க, கால் பகுதி அரசியலில் உளற என்கிற பித்தலாட்ட அரசியலை தாங்கிப்பிடித்து நிற்கின்றன.

சட்டமன்ற உறுப்பினராக ஜெயித்தாரே தவிர, அவர் சட்டமன்றத்துக்கு வருவதே கிடையாது; சட்டமன்றத்தில் உரையாற்றுவது என்பது அபூர்வம். மூன்றாம் பிறை பார்ப்பது போல! அவர் தப்பித்தவறி சட்டமன்றத்தில் என்றோ ஒரு நாள் பேசிவிட்டபோது - அது பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார் தெரியுமா? ""அவர் சட்டசபைக்கு வரும்போதும் குடித்து விட்டு வந்துதான் பேசுகிறார்"" என்றார் ஜெய லலிதா. அதற்கு மறுநாள் சட்டசபைக்கு வெளியே பதிலளித்த விஜயகாந்த் ""எனக்கு ஊற்றிக் கொடுத்தவர் ஜெயலலிதாதான்"" என்றார் ஆத்திரம் பொங்கிட! இப்போது அவர்களே - கூறியதுபோல குடிகாரரும் குடிப்பதற்கு ஊற்றிக் கொடுத்தவரும் கூட்டுச் சேரப் போகிறார்கள் என்கிறார்கள்! - ஆகா என்னப் பொருத்தம் இது என்னப் பொருத்தம் என்று பாட்டுப் பாடலாம் என்று தோன்றவில்லையா? இந்த தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆகியே தீர்வேன் என்று விஜயகாந்த், கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே முழக்கமிட்டு வந்தார். ‘கூட்டணி யாரோடு’ என்று கேட்டால் ""யாரோடும் கூட்டணி இல்லை, மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி"" என்று கொக்கரிப்பார். ஆனால் அந்தோ பரிதாபம்; இப்போது முதலமைச்சர் பதவியை அடியோடு மறந்து விட்டு எந்தக் கட்சியில் கூட்டணி சேர்ந்தால் 40 சீட்டுக்கள் தருவார்கள் என்று தவியாய் தவித்து அலையோ அலை என்று அலைகிறார். இந்த இலட்சணத்தில்தான் அவர் முதல்வர்
கலைஞரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்!

கலைஞர் 1957-ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்றத் தேர்தலில் இருந்து 2006 சட்டமன்றத் தேர்தல் வரையில் 11 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவரது அரசியல் பொதுவாழ்வில் தேர்தல் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அது மட்டுமின்றி ஒரு முறை; இரு முறை அல்ல 5 முறை முதல்வராக அரியணையேறி தமிழகத் தேர்தல் வரலாற்றில் இனி யாராலும் அசைக்க முடியாத - மாற்ற முடியாத ஒரு சாதனை சரித்திரத்தை படைத்து இருக்கிறார். ""தேவைப்பட்டால் இந்த யானையை எதிர்ப் பேன்! என்று கொக்கரிக்கிறது இந்தக் கூவம் நதிக்கரையோரத்து கொசு. முதலமைச்சரை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாதா அல்லது கூடாதா? இந்திய அரசியல் சாசனப்படி யார் வேண்டுமானாலும் எந்தத் தொகுதியிலும் போட்டியிட உரிமை உண்டு. அதன் அடிப்படையில் விஜயகாந்தும் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட
அவருக்கு தாராளமாக உரிமை உண்டு; அதை யாரும் தடுக்க முடியாது! முதலமைச்சர் கலைஞர் அவர்களை தோற் கடிக்கும் வாய்ப்பு எவருக்கும் இருந்ததே இல்லை என்பது தான் கலைஞரின் கடந்த காலம்; இன்றும் அவரை தோற்கடிப்பது என்பது எவராலும் இயலாத காரியம். அது பகற் கனவுதான்! எனினும் விஜயகாந்த் ‘கலைஞரை எதிர்த்து போட்டியிடுவேன்’என்று கூறுகிறாரே; அது ஏன்?

இப்போதே சட்டமன்றத்தில் ஒரு தொகுதியும் வாக்கு சதவிகிதத்தில் 10 சதவிகிதமும் கொண்டிருக்கிற விஜயகாந்த்தை பார்ப்பன பத்திரிகைகள் வலிந்து வலிந்து ஆதரவு கொடுத்து அவரது சோனி அரசியலுக்கு விசுவரூபம் கற்பித்து அவரை பூதாகாரம் ஆக்கி காட்டிக் கொண்டிருகின்றன. அவர் பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர உதவி செய்வார் என்கிற நப்பாசை, பார்ப்பனத்தியை ஜெயிக்க வைக்க சூத்திரனையும், சூத்திரனையும் மோத விடுவதே சரியாக இருக்கும் என்கிற குள்ளநரித் தந்திரமாக அவர்கள் விஜயகாந்த்தை ஓஹோ ஓஹோ என்று புகழ்ந்து எழுதித் தள்ளிய படியே இருக்கிறார்கள். இதற்கு காரணம் விஜயகாந்த்மீது அவர்களுக்கு அவ்வளவு மரியாதை, மதிப்பு என்பது அல்ல, பார்ப்பனத்திக்கு உதவியாக இருப்பார் என்கிற நெஞ்சு கொள்ளாத சுய ஜாதி அபிமானமே காரணம்.

விஜயகாந்த் நிஜமாகவே கலைஞரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவார் என்றால் அவர்கள் இப்போதைவிட இன்னும் அதிக அளவில் பக்கம் பக்கமாக அவரது பேச்சு களை, பேட்டிகளை பிரமாண்டமாக்கிப் பிரசுரிப்பார்கள். அதனால் தேர்தல் வாக்குப் பதிவு நாள் வரையிலான மூன்று மாதங் களுக்கு விஜயகாந்துக்கு அவர் தனது சினிமா வாழ்க்கையில் கூட, இதுவரை கண்டி ராத அளவுக்கு நாள் தவறாமல் விளம்பரம் கிடைக் குமே. அதனாலே அவர் கலைஞர் தொகுதியில் போட்டியிட நினைப்பது என்பது கடைந் தெடுத்த சுயநல அடிப்படையலேயன்றி, ஆதாய, அரசியலன்றி கலைஞரை தோற்கடித்து விட முடியும் என்பதற்காக அல்ல? தினமணி நாளேடு பார்ப்பனர் ஒருவர் ஆசிரியராக பணியாற்றும் ஏடு. அந்த ஏட்டின் ஒரே நோக்கம் அல்லது வெறி ஒன்றே ஒன்று தான் அது என்ன? கலைஞரின் சூத்திர ஆட்சியை அகற்றுவது, பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதுதான். இத்தனை நாள் வரையிலும் விஜயகாந்தை பெரும் சக்திமானாக கற்பனை செய்து எழுதிக் கொண்டிருந்த தினமணி நாளேடு, அவர் ‘ஜெயலலிதாவுக்கே எனது ஆதரவு’ என்று உடனடியாக அறிவிக்காமல் கால தாமதம் செய்து கொண்டே போகிறார் என்பதால் ஆத்திரம் அடைந்து விஜயகாந்தை ‘தனிமரம் தோப்பு ஆகாது’ என்ற தலைப்பு இட்டு கேலியும் கிண்டலும் பொங்கிட தாக்கி ஒரு அரசியல் விமர்சனக் கட்டுரையை வெளி யிட்டு இருக்கிறார்.
அது வருமாறு:-  ""என்ன செய்யப் போகிறார் விஜயகாந்த்? இந்தக் கேள்விக்கான விடையைத்தான் தமிழக அரசியலில் இப்போது எல்லோரும் எதிர்பார்க் கின்றனர். சேலம் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிக்கப் போகிறார் என்று தே.மு.தி.க. தொண்டர்களும் மற்ற கட்சியினரும் எதிர் பார்த்தனர். ஆனால், ""என் திட்டத்தைக் கூறிவிட்டால் எதிராளி உஷாராகிவிடுவார். எனவே இப்போது அதைக் கூற மாட்டேன். உரிய நேரத்தில் கூறு வேன்"" என்று விஜகாந்த் கூறிவிட்டார். மாநாட்டில் முதலில் தரப்பட்ட தீர்மானங்களின் பட்டியலில், தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கூறியிருந்தது. யாருடைய தலைமையில் அணி திரள்வது என்று தெரியவில்லை. அதன்பிறகு மாநாட்டில் பேசிய விஜயகாந்த், கூட்டணி சேர வேண்டுமா என்று தொண்டர் களிடம் கேட்டு, பெரும் பாலானோர் கை தூக்கி ஆதரவு தெரிவித்த பிறகு, ""கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன்"" என்று கூறி விட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், கட்சித் தொண்டர்களை அடமானம் வைத்துவிட மாட்டேன். உங்களை யாருக்கும் அடிமை யாக்கிவிட மாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.

அடமானம் வைக்காத வகையில், யாருக்கும் அடிமையாகாத வகையில் கூட்டணி சேருவது என்றால் எந்த அணியில் இவர் சேர முடியும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் இப்போது எழுந்துள்ளது.  விஜயகாந்தின் நெருக்கமான உறவினர் ஒருவர் மூலமாக அ.தி.மு.க. பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கெனவே அந்த அணியில் ம.தி.மு.க.வும் இடது சாரி அணிகளும் உள்ளன. இந்தக் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட தொகுதி களின் எண்ணிக்கையை இப்போது இந்த அணியில் தர முடியுமா என்பது சந்தேகமே. அந்தக் கட்சிகள் வெவ்வேறு அணியில் இருந்தாலும், மொத்தமாக 50க்கும் மேற்பட்ட தொகுதி களில் நின்றன. அதே அளவு தொகுதிகளை இப்போது தர ஜெயலலிதா முன்வந்தால் மீதி சுமார் 180 தொகுதிகள் இருக்கும். அ.தி.மு.க.வுக்கு 140 வைத்துக் கொண்டாலும் விஜயகாந்துக்கு தருவதற்கு 40 தொகுதிகள்தான் மிஞ்சும். 40 தொகுதிகளுக்கு அவர் ஒப்புக்கொள்வாரா என்பதுதான் கேள்வியாக எழுப்பப்படுகிறது. 40 தொகுதிகளில் நின்றாலும் கணிசமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்களை சட்டப் பேரவைக்கு அனுப்ப இது வாய்ப்பாக இருக்கும் என்பதை விஜயகாந்த் எண்ணிப் பார்க்க வேண்டும் என அ.தி.மு.க. தலைவர்கள் கூறுகின்றனர். கடந்த கால அனுபவங்களைப் பார்த்தால் எந்த அணியில் சேர்ந்தாலும், ""அடகு வைக் காமல், அடிமையாகாமல்"" கூட்டு சேர முடியுமா என்பது சந்தேகம்தான் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்களவைத் தேர்தல் வந்தபோது விஜயகாந்த் சில நிபந்தனைகளை விதித்தார். அவ்வாறு கூறினால்தான் தன்னுடன் யாரும் கூட்டணி பற்றிப் பேச மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். பிறகு தனித்தே தேர்தலைச் சந்தித்தார் விஜயகாந்த். தனித்துப் போட்டியிட விஜயகாந்த் முடி வெடுத்தால், அவரது கட்சியினரே அதை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்களின் சொத்து பத்துக்களை விற்று ஓட்டாண்டியாகும் நிலையில் இருக்கும் கட்சிக்காரர்கள்தான் தே.மு.தி.க.வில் அதிகம் என்று ஒரு முக்கியமான நிர்வாகி குறிப் பிட்டார். ""கூட்டணி இல்லை என்று சொன்னால் கேப்டனின் நிழல் கூட அவருடன் இருக்குமா என்பது சந்தேகம்தான்"" என்று கூறிய அவர் இன்னெரு விஷயத்தையும் பகிர்ந்து கொண் டார். ""எப்படியும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளிவந்து தே.மு.தி.க.வுடன் இணைந்து மூன்றாவது அணி உருவாகும் என்று கேப்டன் நம்பிக்கையில் இருந்தார். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்ப தால் அவர் குழம்பிப் போய் இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். கூட்டணி எதுவும் இல்லையென்றாலும் தே.மு.தி.க. வாக்குகள் அ.தி.மு.க.வுக்குப் போய்விடும்"" என்றும் கருத்து தெரிவித்தார் அவர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் தரப்படும் முக்கியத்துவமும் இடங்களும் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்குத் தரப்பட வேண்டும் என்று விஜயகாந்த் எதிர் பார்ப்பதாகக் கூறப்படுகிறது. அதை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளுமா என்பது சந்தேகம் தான். தே.மு. தி.க.வை தனித்துப் போட்டியிட வைக்க தி.மு.க. தரப்பில் பேசப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்டத்தில் இருந்து சேலம் உரிமை மீட்பு மாநாட்டுக்குப் போயிருந்த நிர்வாகி ஒருவர் மயக்கத்தில் நண்பர்களிடம் சத்தம் போட்டு மன்றாடிக் கொண்டிருந்தார். ""எலேய் .... தனிமரம் தோப்பாகாது என்று கேப்டன் கிட்ட சொல்லுங்கலேய்ய்ய்...!"" சொல்லிவிட்டோம்!""
 - என்று முதன் முறையாக - விஜயகாந்து அப்படி ஒன்றும் பலம் வாய்ந்தவர் அல்ல; அரசியலில் திருப்புமுனை உண்டாக்கவல்லவருமல்ல. தனிமரம் ஒருபோதும் தோப்பு ஆகிவிடாது! கூட்டணியில் அதுவும் பார்ப்பனத்தியின் கூட்டணியில் சேராமல் - அவரால் குறைந்த அளவு சீட்டுகளைக்கூடப் பெறமுடியாது - என்று சித்தரித்திருக்கிறது!

இதனைப்படித்த பிறகாவது பார்ப்பனர்கள் தன்னை ஆதரித்து எழுதுவதின் உண்மையான காரணம் என்ன என்பதை உணர்ந்து - திருந்தி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாமா?

நன்றி:முரசொலி 19-01-2011

No comments:

Post a Comment