Search This Blog

Thursday 20 January 2011

நுழைவுத்தேர்வு: ஜெயலலிதாவின் அற்ப ஆயுசுக் குற்றச்சாட்டுக்கு கபில்சிபல் கொடுத்த மரண அடி!


மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை தடுக்க கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? என்று ஜெயலலிதா ஓர் அறிக்கையின் மூலம் வழக்கம்போல் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற பாணியில் கேள்வி எழுப்பி உள்ளார். 2011 - 2012ம் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தேன். நுழைவுத்தேர்வு குறித்து எல்லா மாநிலங் களுடனும் மருத்துவக் கல்வியாளர்களுடனும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப் படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார்.
நுழைவுத் தேர்வின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.11.2010 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் கருத்து அனுப்பப் பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டார். வரும் 2011 - 2012 கல்வியாண்டில் இப் போது உள்ள நிலையிலேயே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நட வடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது எனவும் எனக்கு பதிலளிக் கும் விதத்தில் கருணாநிதி கூறியிருந்தார். மேலும் எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்திருந் தார். புரிந்து கொண்டு யார் பேசியது, புரியாமல் யார் பேசியது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இது இந்திய அரசு இதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. இதே முறைதான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் கடைப் பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை. - என்பதாக கலைஞர் மீது நாள் தவறாமல் ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கூற வேண்டும் என்கிற தீய நோக்கத்துடன் நாள் தவறாமல் அறிக்கைகளை வெளியிட்டப் படியே இருக் கும் ஜெயலலிதாவின் ஜனவரி 4 செவ்வாய்க் கிழமை வெளியிட்ட குற்றச் சாட்டு ஆகும். இப்போதெல்லாம் ஜெயலலிதாவின் குற்றச் சாட்டுகள் கெட்டிக்காரன் புளுகு 8 நாட்களில் அம்பலமாகி விடும்என்பதைப் போல கூட இல்லாமல் ஒரே நாளில் அற்ப ஆயுளில் முடிந்து விடும் குற்றச்சாட்டாகவே அமைந்திருக்கின்றன. ஜெயலலிதாவின் மருத்துவக் கல்வி தொடர்பான இந்தக் குற்றச்சாட்டும் 24 மணி நேரத்தில் பாதாள குழிக்குப் போய் விட்டது. ஜெயலலிதா 3ம் தேதி வெளியிட்ட இந்த குற்றச்சாட்டு மறுநாள் 4ம் தேதியே மரணித்து விட்டது. 
திருச்சியில் ஐ.எம். அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மரண அடி கொடுத்து பேசியிருக்கிறார். அது வருமாறு :- அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கை செல்லாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள் ளது. எனவே, அந்த அறிக்கையை வாபஸ் பெறுமாறு நான் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தர விட்டுள்ளேன். மருத்துவ பொது நுழைவுத்தேர்வு பிரச்சினையில் மாநிலங்களுக்கிடையே வேறுபட்ட கருத்து நிலவுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்க டெல்லியில் வருகிற 11-ம் தேதி முதல் 13ந் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்ட பிறகே இவ்விவகாரத் தில் இறுதி முடிவு எடுக்கப்படும். - என்பதே கபில்சிபல் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு கொடுத்த மரண அடி ஆகும். அதுமட்டுமின்றி -  இன்னொரு செய்தியும் இன்றைய ஏடுகளில் வெளிவந்திருக்கிறது.  
அது வருமாறு :- மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) சேருவதற்கு நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது. அதன் கொள்கை முடிவில் தலையிட முடியாது என உச்சநீதி மன்றம் தெரிவித்ததால், பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை மருத்துவக் கவுன்சில் வெளி யிட்டது. இதனால், எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கு 2011 - 12 கல்வி ஆண்டு முதல் நாடு தழுவிய பொது நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்தது. இந்த நிலையில், அகில இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவை வாபஸ் பெறுமாறு மத்திய சுகாதாரத்துறை உத்தர விட்டுள்ளது. இதுதொடர்பாக, அகில இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு மத்திய சுகாதார அமைச்சக துணைச் செயலாளர் சுபே சிங், கடந்த 3ந் தேதி அன்று கடிதம் அனுப்பியுள்ளார்.  அதில் கூறப்பட்டுள்ளதாவது :- இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, பிரிவு 33-ன் படி, விதிமுறைகளை வகுக்கும் முன்பாக மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பு விதி 1997 மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு விதி 2000 ஆகியவற்றை மருத்துவக் கவுன்சில் உறுப்பினர்கள் (கவர்னர்கள்) திருத்தம் செய்துள்ளனர். மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெறாமலேயே மருத்துவ படிப்பு மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக் கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் மத்திய அரசிடம் முன் அனுமதி பெறப்படவில்லை. எனவே, இந்த அறிவிப்பு செல்லாது.  மேற்கூறிய காரணத்தால், பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக மருத்துவக் கவுன்சி லால் மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நுழைவுத் தேர்வு அறிவிப்பு வாபஸ் பெறப்பட்ட தகவலை சுகாதார அமைச்சகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. - என்பதே அந்தச் செய்தி. அதுமட்டுமா? புதுச்சேரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி நாராயணசாமி அவர்களும் ""மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பல மாநிலங்களில் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே, நுழைவுத் தேர்வில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் "" என்று குறிப்பிட்டுள்ளார். ஆக 3-ம் தேதியன்று ஜெயலலிதா சுமத்திய குற்றச்சாட்டு 4ம் தேதியே அற்ப ஆயுள் குற்றச்சாட்டாக மாறி மரண மடைந்துவிட்டது.

நன்றி : முரசொலி 07-01-2011    

No comments:

Post a Comment