Search This Blog
Showing posts with label தமிழ்நாடு அரசு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு அரசு. Show all posts
Wednesday, 1 December 2010
ஸ்டாலின் என்றொரு மானுடன்
இந்த 57 வயது இளைஞன் 2006ஆம் வருடம் மே மாதம் 28ந் தேதி உள்ளாட்சித்துறை அமைச்சராக (2008ஆம் ஆண்டு மே 29 தேதியிலிருந்து துணை முதல்வர்) பொறுப்பேற்ற பிறகு இந்த 4 வருடங்கள் 7 மாதங்களில் தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 3,50,000 கிலோ மீட்டர்கள் கார், ரயில், விமானம் மூலமாக சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.
இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சென்னையை விட்டு, தன்னுடைய குடும்பத்தினரை விட்டுவிட்டு வெளியூர்களில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்.
இதே கால கட்டத்தில் ஸ்டாலின் 257 முறை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார்.
அவர் கலந்துகொண்ட அரசு விழாக்களின் எண்ணிக்கை 473. கட்சி விழாக்களின் எண்ணிக்கை 243.
மொத்தமாக தன்னுடைய பார்வைக்கு வந்த 34,899 மனுக்களில் 32,098 மனுக்களை விசாரித்து குறைகளைத்தீர்த்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் காலை ஸ்டாலின் தனது இல்லத்தில் 8 மணிக்கு ஆரம்பித்து, ஒரு மணி நேரத்தில் 100ல் இருந்து 200க்கு மேல் பொதுமக்கள், பார்வையாளர்களைச் சந்திக் கிறார். தலைமைச்செயலகத்தில் தனது பணி களுக்கிடையே அங்கேயும் பார்வையாளர் களைச்சந்திக்கிறார். மாலையில் அரசு விழாக்களில் பங்கேற்கும்போதுகூட மனுக் களுடன் வருபவர்களைச்சந்திக்கிறார். இப்படி ஸ்டாலினின் ஒருநாள் பொழுது முடிகிற போது அவர் சந்தித்து முடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரத்தை நோக்கி நெருங்கிக்கொண்டிருக்கும்.
சட்டப்பேரவை நடக்கின்ற காலங்களில் தன்னுடைய துறைகளின் மானியக்கோரிக் கையை பேரவையில் சமர்ப்பித்தல், விவாத காலங்களில், தனது அலுவலகத்தில் துறை அதிகாரிகள், செயலர், உதவியாளர்களுடன் குறிப்புகளைத் தயார் செய்திட, விவாதிக்க மாலை 6 மணிக்குத் தொடங்கும் கூட்டம் நள்ளிரவு 12 மணி வரைகூட நீடிப்பது உண்டு.
சட்டமன்ற பதிலுரைக்கான குறிப்புகளை யெல்லாம் விவாதித்து அவற்றை ஸ்டாலின் தன் கைப்படக்குறிப்புகளை எழுதிக்கொள்வார்.
இந்த ஓயாத, சலியாத உழைப்பு, சுறுசுறுப்பின் ரகசியம் பற்றி ஸ்டாலினிடம் கேட்டால், ‘கலைஞரின் சுறுசுறுப்பு, அவருடைய ஓயாத, சலியாத உழைப்புக்கு முன் இதெல்லாம் எம் மாத்திரம்?’ என்று தன்னடக்கத்துடன் பதில் சொல்கிறார். மீண்டும் வலியுறுத்திக் கேட்டால், ""தி.மு.க. மீது தொண்டர்களும் தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்களும் வைத் திருக்கும் நம்பிக்கை, அவர்களின் எதிர்பார்ப்புகள்தான் என்னைத்துவளாமல் செயல்பட வைக்கிறது"" என்கிறார். ""காலையில் 30 நிமிட வாக்கிங், அடுத்து 45 நிமிட யோகாசனம், மதிய உணவுக்குப் பிறகு 1 மணி நேர குட்டித் தூக்கம் மற்றும் பேரக்குழந்தைகளுடனான சில நிமிடக்கொஞ்சல்கள் என்னை நாள் முழுக்க சுறுசுறுப்பாகச்செயல்பட வைக்கிறது"" என்கிறார் அவர்.
- என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி - ‘இந்தியா டுடே’ வார இதழின் பொறுப்பு ஆசிரியர் ஆனந்த நடராஜன் - `இந்தியா டுடே’யின் ‘மு.க.ஸ்டாலின் சிறப்பித’ழில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள இந்தச்சிறப்பிதழ்,
- ஸ்டாலினின் இளமைக் காலம்
- அரசியல் நுழைவு
- மிசாச் சிறைவாசம்
- அவர் நடித்த கழகப்
பிரச்சார நாடகங்கள்
- அவரது திரைப்படங்கள்
- தொலைக்காட்சித் தொடர்கள்
- இளைஞர் அணி தொடக்கம்
- கழகம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது
இளைஞர் அணியின் எழுச்சி நிறை பணிகள்
- சென்னை மாநகர மேயராக
அவர் ஆற்றிய அரும்பணிகள்;
அவரது நிர்வாகத் திறமை
- தொண்டால் பொழுதளந்து அதன்மூலம் படிப்படியாக எம்.எல்.ஏ., கழகப் பொருளா ளர், அமைச்சர், துணை முதலமைச்சர் - என்று படிப்படியாக உயர்ந்து உச்ச நிலையை எட்டியது.- துணை முதலமைச்சர் பொறுப்பில் அவரது அயராத உழைப்பு, அபார சாதனைகள்.
- அதிகாரிகளிடம் அவர் காட்டும் கனிவு
- குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டங்களை - விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பே விரைந்து நிறைவேற்றச் செய்திடும் அவரது நிர்வாகத் திறமை
- என்று ஸ்டாலினின் பன்முகத்திறமைகளை நிகழ்ச்சிகள் - ஆதாரங்கள் - புள்ளி விவரங்களோடு வெளிப்படுத்தும் சுவையும் பயனும் மிகுந்த மிகச் சிறந்த கட்டுரைகள் கொண்டதாக அமைந்திருக்கிறது. மொத்தத்தில் இந்தச் சிறப்பிதழை - ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு - என்றே அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் - மெத்தச் சிரமமும் அக்கறையும் கொண்டு தயாரித்திருக்கிறது இந்தியா டுடேவின் ஆசிரியர்குழு.
ஸ்டாலின் எதிர்ப்புக் கட்டுரையோ என்று நினைக்கச்செய்யும் சில கடுமையான எதிர்ப் பார்வை கொண்ட கட்டுரைகளையும் வெளியிடத்தயங்கவில்லை அது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஸ்டாலின் பெயரால் தி.மு.க.வுக்கு எதிரான நெடிகாரம் சற்று அதிக மாகவே இருக்கிறது!
இந்தச் சிறப்பிதழுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்ன?
இந்தியா டுடே இதுவரையில் 4 சிறப்பிதழ்களை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. அதிலே இது 4வது சிறப்பிதழ்.
இந்தியா டுடே வெளியிட்ட சிறப்பிதழ்கள் பற்றி அதன் ஆசிரியர் பிரபுசாவ்லா - ஒரு அருமையான முன்னுரையை எழுதியிருக்கிறார். அதிலே சிறப்பிதழ் வரிசையில் ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை எழுதி யிருக்கிறார். அதுவே இந்தச் சிறப்பிதழின் மணிமுடியாக - சிகரமாக அமைந்திருக்கிறது.
அது வருமாறு:-
இந்தியா டுடே வழங்கும் சிறப்பிதழ்கள் மிகவும் பிரபலமாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். செய்தியில் தொடர்ந்து அடிபடும் ஆளுமைகளை வைத்து ஒரு முழு இதழ் கொண்டு வரும் நோக்கத்தில்தான் சிறப்பிதழ் கள் என்ற கருத்தாக்கம் கொண்டு வரப்பட்டது. தத்தமது துறையை பிறர் பார்த்த விதத்தை மாற்றியமைத்த நபர்களின் பல்வேறு பரிமாணங் களுக்கு கவனம் கொடுக்கும் சிறப்பிதழ்கள் இவ்வாறு தான் பிறந்தன. 2007ல் ரஜினிகாந்த் சிறப்பிதழுடன் இதன் பயணம் தொடங்கியது. அதன் பிறகு இதுவரை நான்கு சிறப்பிதழ்களை வெளிவிட்டிருக்கிறோம். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் சிறப்பிதழை நாங்கள் 2008ல் வெளியிட்டபோது பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இப்போது தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பிதழ்மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்டாலினின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி அவர்களை மிக நெருக்க மாக அறியும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களாக பழகி வந்திருக் கிறேன். முதிர்ந்த தலைவர். சிறந்த ராஜதந்திரி, அரசியலில் உறுதியுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படுபவர். இந்தியாவின் மிக உயர்ந்த, என்றும் நிலைத்திருக்கும் தலைவர். அவருக்கு அரசியலிலும் ஆட்சியிலும் தோள் கொடுக்க வந்திருக்கிறார், அவரது இளைய மகன் மு.க.ஸ்டாலின்.
‘மிசா’ சிறைக் கொடுமை அனுபவங்களுடனும் 40 ஆண்டு கால அரசியல் அனுபவங் களுடனும் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை நான் நேரில் சந்தித்ததில்லை. என்றாலும் அவர் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக வந்திருக்கிறார். அவர் சென்னையில் மேயராக முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே சென்னை யை சிங்காரச் சென்னையாக்க வேண்டும் என்கிற விரிந்த கனவுடன் செயல்பட்டு அவர் நனவாக்கவும் செய்தார். அப்போது அவருடைய ஆட்சித்திறன் எல்லோருக்கும் தெரிய வந்தது.
சமீபகாலமாக கருணாநிதியால் விரிவாக பயணம் செய்ய முடியாத நிலையில் துணை முதல்வரான ஸ்டாலின் பரவலாகப் பயணம் செய்து அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
வாரிசு அரசியல்வாதி என்கிற விமர்சனங்களி லிருந்து ஸ்டாலின் தப்பிக்க முடியவில்லை யென்றாலும் தனது 40 ஆண்டு கால அரசியல் பணி, கடுமையான உழைப்பு, விடாமுயற்சி, எதிர்காலத் தமிழகம் குறித்த கனவு, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் சிநேகமாகப் பழகும் பாங்கு ஆகியவை அந்த விமர்சனங்களை சரிக்கட்ட உதவுகின்றன.
- என்று குறிப்பிட்டிருப்பதின் மூலம் முழுச் சிறப்பிதழையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவலைத்தூண்டிவிட்டிருக்கிறார் ஆசிரியர் பிரபுசாவ்லா.
இந்தியா டுடே - சிறப்பிதழ் ஸ்டாலினின் அரசியல் பற்றி ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகளில் அவரது
- மனிதநேயம்
- எதிர்க்கட்சித் தலைவர்களை
மதிக்கும் ஜனநாயக மாண்பு
- உற்றுழி உதவி - உறுபொருள்
வழங்கிடும் உதாரணம்
ஆகியவைகளே விரவிக் கிடக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்று -
ஸ்டாலின் ஓர் அரசியல்வாதி, துணை முதல்வர் என்பதைவிட
ஸ்டாலின் ஒரு
மனிதாபிமானி
என்பதே முதன்மையானது என்பதை விளக்கிடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் காட்டி விளக்கியிருக்கிறார்.
அது வருமாறு:-
சில மாதங்களுக்கு முன்பு காலை 10.00 மணி அளவில் சென்னையில் என் இல்லத்தில் இருந்தேன். தலைவர் வாசன் வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. சென்னையில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் சில நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த எங்களது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்து போனார். உடனடியாக அங்கே சென்று அவரது சடலத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
நான் அங்கு போய்ச் சேருவதற்குள் அங்கே வந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டுச் சென்றுவிட்டார் துணை முதலமைச்சர். அங்கே நின்று கொண்டிருந்த சில திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களின் முகத்தில் கசப்பு ரேகைகளை என்னால் பார்க்க முடிந்தது.
அங்கே இருந்த சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் சைதை ரவியிடம் என்ன காரணம் என்று கேட்டேன். இறந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் உறவினர் ஒருவர் துணை முதலமைச்சரிடம் மிகவும் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டார். அதைப் பார்த்த தி.மு.க. நண்பர்கள் மிகவும் வருத்தமடைந்து விட்டார்கள். வேறு இடமாக இருந்து இருந்தால் கைகலப்பு நடந்திருக்கும் என்று சொன்னார்கள்.
இறந்துபோன சட்டமன்ற உறுப்பினருக்கு மரியாதை செலுத்தவந்த துணை முதலமைச்சரைப் பார்த்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஒரு நண்பர், ""நீங்கள் எல்லோரும் ஏமாற்றிவிட்டீர்கள். யாரும் அவரைக் கவனிக்க வில்லை. இப்போது எதற்காக இங்கே வந்தீர்கள்?"" என்ற தொனியில் மிகவும் உரத்த குரலில் அந்த மருத்துவமனையே அதிரும் அளவுக்குப் பேசியுள்ளார். எவ்வித பதிலும் சொல்லாத துணை முதலமைச்சர், மறைந்த சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் வளையம் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பிவிட்டார். இதனைக் கேள்விப்பட்ட நான் அவமானத்தில் குன்றிப் போனேன்.
ஏனென்றால், இறந்து போன சட்டமன்ற உறுப்பினரை மூன்று முறைக்குக் குறை வில்லாமல் மருத்துவமனைக்கு வந்து பார்த்து விட்டுச் சென்றவர் துணை முதலமைச்சர். இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மறைந்துபோன சட்டமன்ற உறுப்பினரின் சகோதரரை அழைத்துக் கொண்டு துணை முதலமைச்சரைச் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை ரூ.9 லட்சம் செலவாகியிருக்கிறது என்று சொன்னவுடன், துணை முதல்வர் நேரில் சென்று சட்டப்பேரவைத்தலைவரிடமும், செயலரிடமும் பேசி உடனடியாக ரூ.9 லட்சத்தை மருத்துவ மனைக்கு காசோலை மூலம் அனுப்பி வைத்தார். அதுமட்டு மல்லாமல், இனி எவ்வளவு தொகை ஆனாலும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று கடிதத்தையும் கொடுக்கச் சொன்னார்கள். அந்தக் காசோலையை அனுப்பி வைத்து விட்டு அவரே அன்று நேரிடையாக மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் நிலைi மயை விசாரித்துச் சென்றார்.
இவ்வளவு உதவிகளைச் செய்த ஒருவரிடம் இப்படி ஒருவர் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டாரே என்று தெரிந்தவுடன் நான் மிகவும் வருத்தமுற்றேன். உடனே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனிடம் இதனைத் தெரிவித்து எங்கள் சார்பாக நீங்கள் துணை முதலமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் துணை முதலமைச்சரிடம் பேசினார்.
இரண்டு நாட்களுக்குப் பின்பு கோட்டையில் நான் நேரில் சந்தித்து நடந்தவைகளுக்கு வருத்தம் தெரிவித்தேன். அவரோ, மிகவும் இயல்பாக, ""ஏதோ எம்.எல்.ஏ. இறந்த வருத்தத்தில் பேசிவிட்டார்கள். நம்மிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசுவார்கள்?"" என்று சிரித்துக்கொண்டே சொன்னவுடன் எவ்வளவு உயரத்திற்கு அவர் வளர்ந்துள்ளார் என்பதைப்புரிந்துகொண்டேன்.
- என்று நெஞ்சம் நெக்குருகி - வாசகர்களின் கண்களைப் பனிக்கச் செய்யும் வகையில் எழுதியிருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ். மொத்தத்தில்
மு.க.ஸ்டாலின்
பொன்னியின்
செல்வன்
(அடிப்படை உறுப்பினர் முதல் துணை முதல்வர் பதவி வரை)
ஸ்டாலினின்
40 வருட
வரலாறு
என்று தலைப்பிட்டு இந்தியா டுடே வெளியிட்டுள்ள சிறப்பிதழ் ஒரு ‘தகவல் களஞ்சியம்’ என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கவியலாது!
-சின்னகுத்தூசி நன்றி:முரசொலி(27-11-2010)
வசிஷ்டர் வாயால் அருளிய ‘பிரும்மரிஷி’ப் பட்டம்!
![]() |
| மு.க.ஸ்டாலின் |
இந்த விஷயத்தில் இந்தியா டுடே - ஸ்டாலின் சிறப்பிதழ் வித்தியாசமான கோலத்தில் காட்சியளிக்கிறது. ஸ்டாலின் மேயராக இருந்தபோதும், துணை முதல்வராக இன்று பணியாற்றும் இந்தக் காலகட்டத்திலும் ஸ்டாலின் கண்ட கனவுகள் நனவாகவும் அவர் தமது துறையில் பல்வேறு சாதனைகளைக் குவிக்கவும் அவருக்குப் பக்கபலமாக இருந்து பாடுபட்டவர்கள் நிர்வாகத்திறமை வாய்ந்த அதி காரிகளே, ஸ்டாலின் நினைப்பதை யெல்லாம் நூற்றுக்கு நூறு சில சமயங்களில் நூற்றுக்கு இருநூறு என்ற விகிதத்தில்கூட முழுமையாக நிறைவேற்றி வைப்பதில் அவர்களது நிர்வாகத்திறமைக்கு பெருமளவில் பங்குண்டு. ஸ்டாலினின் வெற்றிகள் தனி நபரின் வெற்றிகளல்ல, அது அவர் தேர்ந்தெடுத்த அதிகாரிகள் அணியின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்பதை விளக்கி, ‘தளபதியின் தளகர்த்தர்கள்’ என்கிற தலைப்பில் கா.சு.துரையரசு எழுதிய ஓர் அருமையான கட்டுரையை வெளியிட்டதின் மூலம் - நமது அரசு அதிகாரிகள் எவ்வளவு ஆற்றல்மிக்கவர்கள் என்பதை பறைசாற்றி இருக்கிறது இந்தியா டுடே - சிறப்பிதழ்.
அந்தக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு :-
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் - திருவள்ளுவர் தமிழக துணை முதல்வரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனக்குக் கீழே உள்ள அதிகாரிகள் அணியை உருவாக்கும் விதத்திற்கு இந்தக் குறள் பொருந்தும். மேயராக இருந்த காலத்திலேயே தன்னைச்சுற்றி திறமையான, நம்பகமான அதிகாரி களின் குழாம் ஒன்றை உருவாக்கி, வளர்ச்சியை சாத்தியமாக்கியவர் ஸ்டாலின். அப் போதைய துணை ஆணையரான பி.செந்தில்குமார், இன்று நகராட்சி நிர்வாகத்துறையில் இயக்குநராக அமர்த்தப்பட்டிருக்கிறார். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை பெயர்த்தெடுத்து உருவாக்கப்பட்ட தனது அமைச்சகத்தை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்ட உடனேயே ஸ்டாலின் முதலில் தேடியது சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான். கே.தீனபந்து, அசோக்வர்தன் ஷெட்டி, கே.ரகுபதி, டி.உதயசந்திரன், ககன்தீப் சிங் பேடி என தற்போது ஸ்டாலினின் அணியில் இருக்கும் அதிகாரிகள் வெவ்வேறு இடங்களில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கொண்டுவரப் பட்டவர்களே.
இவர்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் திறமையா னவர் என்று பெயரெடுத்தவருமான தீனபந்து, ஸ்டாலின் துணை முதல்வரான பிறகு அவரது முதன்மைச் செயலராக நியமிக் கப்பட்டார். நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக 2 ஆண்டுகள் இருந்த இவர், இடையில் வருவாய்த்துறைக்குச் சென்றுவிட்டு தற்போது முதன்மைச்செயலாளராகப் பணி அமர்த்தப் பட்டிருக்கிறார். ஸ்டாலின் அணியின் அடுத்த முக்கிய நட்சத்திரமான அசோக்வர்தன் ஷெட்டி, தொடர்ச்சியாக ஊரக வளர்ச்சித் துறையின் பல்வேறு பதவிகளில் இருந்தவர். அவருக்கு ஊரக வளர்ச்சி இயக்குநர் பதவி அளிக்கப்பட்டது (தற்போது நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலாளர்). கறார் தன்மையும், சிபாரிசுக்கு இடம் கொடுக்காத நடைமுறையும் ஷெட்டிக்கு கண்டிப் பானவர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. துறைக்கு ஒதுக்கப்படும் நிதி சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்கி றதா என்பது இவரின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பாது. லண்டன் பர்மிங்ஹாம் பல் கலைக்கழகத்தின் மேலாண்மையியல் பட்ட தாரியான ஷெட்டிதான் லண்டனில் பெற்ற பல்வேறு பயிற்சிகளையும் திறமைகளையும் இத்துறையில் பயன்படுத்துகிறார். இத்துறை யைச்சேர்ந்த ஊழியர்களுக்குப் பணியிடைப் பயிற்சி வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த அதிகாரிகள் அணியின் திறமையை வளர்ப்பதில் இவர் பெரிதும் கவனம் செலுத் தினார்.
தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை பய்றி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப் பட்டிருப்பதில் ஷெட்டியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அவரோடு ஊரக வளர்ச்சி இயக்குநராக இருந்த (தற்போது குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்) ககன்தீப் சிங் பேடி அவருக்கு தோள் கொடுத்ததும் பல திட்டங் களை வெற்றித் திட்டங்களாக்கியது. குறிப்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு ஸ்டாலினின் அணி கொடுத்த உந்து சக்தியே காரணம். இத்திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளுக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் நிதி ஒதுக் கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி களிலும் தலா ஒன்று வீதம் முழு நேர நூலகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இவற்றில் கௌரவ ஊதியத்தில் நூலகர்களாக நியமிக் கப்பட்டிருக்கிறார்கள். தமிழக கிராமங்களில் சமூக மோதல்கள் உருவாகப் பெரிதும் காரணமாக இருப்பவற்றுள் சுடுகாட்டுப் பிரச்சினை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதற்கும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டம் ஒரு தீர்வை கண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எல்லா சமூகத்தினருக்கும் பொதுவான ஒரு நவீனமயானம் இத்திட்டத்தின் கீழ் உரு வாக்கப்பட்டு இருக்கிறது. அங்கு எரிமேடை, குடிநீர் வசதி, சிமென்ட் சாலை, தெரு விளக்கு என்று எல்லா வசதி களும் செய்து தரப்படுகின்றன.
இது தவிர ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு ஊருணி (குளம்) வீதம் உருவாக்கித்தரப்படுகிறது. இதனால் அந்த ஊராட்சி முழுமைக்கும் குடிநீர் ஆதாரம் உறுதி செய்யப்படுகிறது. இது தவிர, பாரம்பரிய கிராமப்புறச் சந்தைகளை மேம்படுத்துதல், ஊராட்சி ஒன்றியப் பள்ளி களின் சீரமைப்பு முதலிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் இத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களின் வெற்றி தனி நபர்களின் வெற்றியல்ல. மாறாக, ஸ்டாலினின் தலைமையில் ஆர்வமுடன் செயலாற்றிய அணியின் வெற்றி. தற்போது ஷெட்டி, உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி, இப்போது பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உயர்ந்திருக்கும் ரகுபதி (ஊரக வளர்ச்சித்துறை வரலாற்றிலேயே இப்போதுதான் இத்துறை அதிகாரி களுக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது) ஆகி யோரின் கூட்டு முயற்சியையே பாராட்ட வேண்டும்.
கட்டுமானப்பணிகளையும் ஒப்பந்தக்காரர்களையும் மேற்பார்வையிடும் அதிகாரி களுக்கு, ஸ்டாலினின் அதிகாரிகள் அணி சுதந்திரமாக செயல்பட அதிகாரம் கொடுத் திருக்கிறது. ""எனக்கு டி.ஆர்.டி.ஏ.யைத் தெரியும், அரசுச் செயலாளரைத் தெரியும்"" என்று சொல்லிக் கொண்டு யாரும் எந்த ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க முடியாது. ஷெட்டி, பேடி, உதயசந்திரன், கே.கோபால் (தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் தற்போதைய மேலாண் இயக்குநர்) என்று, அனைத்து அதிகாரிகளுமே பரிந்துரைக்கு இடம் கொடுக்காதவர்கள் என்று பெயர் எடுத் திருப்பது தான் இந்த வெற்றிக்குக் காரணம். அதே போல திட்டப் பணிகளின் படிப்படியான வளர்ச்சி நிலையை மதிப்பிட வாராந்தர திறனாய்வுக் கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை ஷெட்டி அறிமுகப்படுத்தி வைத் திருக்கிறார். இது பல்வேறு திட்டப்பணிகளின் வேகத்தை அதிகமாக்க உதவியிருக் கிறது. அதிகம் கண்டு கொள்ளப்படாத, ஒப்பந்தக் காரர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருந்த உள்ளாட்சித்துறையை புரஃபஷனலாக மாற்றியதில் ஸ்டாலினின் இந்த அதிகாரி கள் படைக்கு பெரும் பங்குண்டு.
துணை முதல்வரின் துறைக்காக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளின் நேர்த்தியான பார்வை, அவர்களின் தொழில் நேர்த்தி, வேலையில் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு முதலானவை தமிழக அரசு நிர்வாகத்தின் மற்ற துறைகளுக்கும் நீட்டிக்கப்படுமானால் அது ஒட்டுமொத்த தமிழகத்தின் நல்லாட்சிக்கான ஆரம்பமாக இருக்கும். - என்று எழுதியிருப்பதின் மூலம் - ஸ்டாலின் மட் டுமா? அவர் தேர்வு செய்து கொள்ளும் அதிகாரிகளும் நிர்வாகத்திறமை வாய்ந்தவர்கள் தான் என்பதை எடுத்துக் காட்டியிருக் கிறார் சு.துரையரசு. ம்ம்ம் தலைசிறந்த நிர்வாகிகள் துணையுடன் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் - ஸ்டாலின் தமது துறைகளில் குவித்த சாதனைகள் என்னென்ன என்று தகுந்த ஆதாரங்களுடன் ""ஸ்டாலின் கண்ட கனவு"" என்ற தலைப்பில் லட்சுமி சுப்பிரமணியன், ஸ்டாலினின் மகத்தான சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கிறார்.
அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு:- தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெண்களின், அதிலும் குறிப்பாக சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மகளிரின் வாழ்வாதார நிலையும் பொருளாதார நிலையும் மேம்பட்டு வருகின்றன. துணை முதல்வரின் பெருமுயற்சியாலும் முனைப்பினாலும் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக்குழுத்திட்டமே அதற்குக் காரணம். கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப் பேற்றதும் உடனடியாக நிறைவேற்ற நினைத்தது இரண்டு காரியங்களை : ஒன்று கிராம வளர்ச்சி, மற்றொன்று பெண்களின் மேம்பாடு. கடந்த நான்கு வருடங்களில் 1.59 லட்சம் புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த புதுக்குழுக்களில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 23.95 லட்சம், 1989ல் துவங்கிய இந்த மகளிர் சுயஉதவிக்குழுத்திட்டத்தின் வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களில் உச்சத்தை எட்டி வருகிறது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.74 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் அதில் 73.60 இலட்சம் பெண்கள் உறுப்பி னர்களும் இருக்கிறார்கள். இவர் களின் மூலம் வங்கிகளில் சுமார் ரூ.2,568 கோடி சேமிக் கப்பட்டிருக்கிறது. 2006ல் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் இந்த சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதியை விரைந்து கொடுக்கவும் ரூ.15,000த்திலிருந்து ரூ.50,000 மாக அதிகரித்துக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார். பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் இதற்கென அரசு, வங்கி அதிகாரிகளுடன் பல கட்ட ஆய்வுக்கூட்டங்களை நடத்தச்செய்து, வங்கி அதிகாரிகளை இதற்கு இணங்க வைத்தது ஸ்டாலினின் துடிப்பான செயல்பாட்டிற்கு சாட்சி. இதனால் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்பு இருந்ததைவிட அதிக அளவில் கடன் கொடுக்க வங்கிகளும் முன் வந்தன. ஆனால் இந்த வெற்றியோடு இந்தத் திட்டம் நின்று விடக்கூடாது என்பதில் முனைப்போடு இருந்தார் துணை முதல்வர். அதனால் 2007 வரை வெறும் ரூ.593 கோடியாக இருந்த சுயஉதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை 2010ல் ரூ.2,791 கோடி யாக எட்டச்செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இப்போது பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கி, அதன்மூலம் சுயஉதவிக் குழுக்களுக்கு இன்னும் அதிக உதவிகள் கிடைக்க வழி செய்திருக்கிறார் ஸ்டாலின்.
தற்போது தமிழகத்தில் உள்ள 12,618 கிராமங்களில் ஏறத்தாழ 4000 கிராமங்களில் இந்தக் கூட்டமைப்புகள் துடிப்புடன் செயலாற்றி வருகின்றன. இதன்மூலம் பெண்களும் அவர்கள் வசிக்கும் கிராமங்களும் பொருளாதாரத்தில் புத்துயிர் பெற்று வருகின்றன. தொழில் செய்வதற்கு மட்டும் கடன் வசதி இருந்த நிலை மாறி, இப்போது இந்தப் பெண்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் கடன் பெறும் வசதியையும் உருவாக்கி இருக்கிறது தமிழக உள்ளாட்சித்துறை. தனிப்பட்ட செலவுகளுக்காக கந்து வட்டிக்காரர்களின் மீட்டர் வட்டிச் சூழலில் ஏழைக்குடும்பங்கள் சிக்குவது இதன்மூலம் தடுக்கப்படுகிறது. வழக்கமான அரசு அலுவலர்களைப்போல காலையில் குஷன் சேரில் அமர்ந்து அதை ஒரு நாள் தேய்த்துவிட்டு, மாலை ஆஃபிஸ் விட்டாச்சு என்று கிளம்புகிற அமைச்சர்களே தமிழகத்தில் அதிகம். தனது துறையின்கீழ் என்ன செய்யலாம் என்ற சிந்தனையே இல்லாமல், ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்கு எதிர் வினை யாற்றினால் போதும் என்று நினைக்கும் ரகத்தினரே அதிகம். இவர்களுக்கு மத்தியில் சமூகத்தின் முக்கிய மான தேவைகள் என்ன, அவற்றை நிறைவேற்ற என் னென்ன திட்டங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று யோசித்து செயல்படுகிறவர் ஸ்டாலின். இத்தகைய ஈடுபாட்டால் தனது கனவுத் திட்டங்கள் எவ்வாறு நிறை வேற்றப்படுகின்றன என்று அதிகாரிகளிடம் அவ்வப் போது கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டவர் ஸ்டாலின். ஸ்டாலினின் முக்கியத்துவம் பெற்ற திட்டங்களில் சமீபத்தில் சேர்ந்திருப்பது ‘குடிசை களில்லா மாநிலம்’ என்ற கனவு. கலைஞர் வீட்டு வசதித்திட்டத்தின்மூலம், 2016 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் ஒரு பிரஜைகூட குடிசையில் வாழும் நிலை இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். முதற்கட்டமாக இந்த வருடம் ரூ.1800 கோடியில் 3 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடு களாக மாறும். கேண்டீனிலும் அரட்டைக்கச்சேரியிலும் ஊதியக்குழு சிபாரிசுகளால் தங்களுக்கு எவ்வளவு லாபம் என்ற கணக்குகளிலும் தங்கள் அலுவல் நேரத்தை அதிகம் செலவிடும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் உள்ளாட்சித்துறை இரவிலும் வார விடுமுறை களிலும் கூட வேலை பார்க்கிறது. இது வெறுமனே அதிகாரிகளுக்கு பயந்து நடக்கும் காரியமாகத் தெரியவில்லை. ஸ்டாலினில் தொடங்கும் சமூக அக்கறை, துறைத்தலைவர்கள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை பரவுகிறது. இந்த அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சுமார் ஒரு டஜன் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர் களாவது வாங்கும் சம்பளத்தை விட கூடுதலாக உழைக்கிறார்கள் என்று கூறலாம்.
ஸ்டாலினின் கனவுத்திட்டங்கள் துரிதமாக நிறை வேற்றப்படுவதற்கு அதிகாரிகளையும் ஊழியர்களையும் இவ்வாறு சிறப்பாக செயல்பட வைப்பதும் ஒருகாரணம். ""அதிகாரிகள் இவர் துறைகளில் பணியாற்ற வரும் போது உங்களிடம் பணியாற்றுவது பெருமை, பாக்கியம் என்று மகிழ்ந்து சொல்லும் அளவுக்கு துணை முதல்வர், அவர்களை சிறப்பாக கையாள்கிறார்"" சட்டத்திற்கு புறம்பாக அதிகாரிகளிடத்தில் ஸ்டாலின் எதையும் செய்யச்சொல்வதும் இல்லை, சட்டப்படியான பணிகள் நடைபெறுவதில் குறுக்கிடுவதும் இல்லை என்று சொல்லப்படுகிறது. - என்று ஸ்டாலினின் நிர்வாகத்திறமை - சாதனைகளைப்பட்டியலிட்டிருக்கும் லட்சுமி சுப்பிரமணியத்தின் கட்டுரையிலும் அதிகாரி களின் செயல்பாடுகள் முக்கிய இடம் பெற்றிருக் கின்றன! ம்ம்ம் தமது துறையின்கீழ் செயல்படும் அதிகாரிகள் மீது யாராவது வேண்டுமென்றே பொய்ப் புகார் கூறினால் துணை முதல்வர் அவற்றினை எப்படி அணுகுவார் என்பதை எடுத்துக் காட்ட இரண்டு நிகழ்வுகளை சுட்டிக்காட்டியிருக்கிறார், அவரது மக்கள் தொடர்பு அலு வலரான ம.அரிகிருஷ்ணன். - தனது ‘ஓயாது உழைக்கும் இளையசூரியன்’ என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். ""ஒரு மாவட்ட ஆட்சியர், பரிந்துரைகளைச்செய்து கொடுப்பதில்லை எனப்புகாராக அவரிடம் கூறப்பட்டபோது தளபதி சொன்னார் ""அந்த மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரே சொன்னாலும், நியாயமாக இருந்தால் மட்டுமே அதை செய்வார்."" அந்தத் தருணத்தில் அவரது நியாய உணர்வு என்னை பூரிக்க வைத்தது"". பிறரை எடை போட்டுப்பார்க்கும் திறமையையும் அவரிடம் கண்டு வியந்திருக்கிறோம். ஒரு மாவட்ட ஆட்சியர் சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு செய்வதில் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார் என்று ஒரு பிரமுகர் புகார் கூறினார். துணை முதல்வர் அவர்கள் சொன்னார்கள் ""உங்கள் பரிந்துரையை அவர் ஏற்காததால் குற்றம் சுமத்துகின்றீர்கள் என எண்ணுகிறேன். அந்த ஒதுக்கீட்டில் தவறே செய்ய முடியாது. அந்த அளவிற்கு ஒதுக்கீடு செய்வதில் விதிமுறைகளை வகுத்துக்கொடுக்கிறோம்"" என்று உறுதிபடக் கூறினார். - என்கிறார் அவர்.
ஆக இதன் மூலமும் ஸ்டாலின் நிர்வாகத் திறமையும் - அவர் அதிகாரிகளிடம் வைத் திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும் பளிச்சிடுகின்றன. ம்ம்ம் இந்தச் சிறப்பிதழில் - துணை முதல்வர் ஸ்டாலி னின் குறித்து தி.மு.கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக அரசின் நிதியமைச்சருமான இனமானப் பேராசிரியர் அவர்கள் ‘பெயர் சொல்லும் பிள்ளை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை - வெறும் கட்டுரை அல்ல - கழக வரலாற்றில் ஸ்டாலின் பங்கும் பணியும் - அவரது எதிர்காலம் எப்படி அமையும் என்பது பற்றியும் செதுக் கப்பட்ட கல்வெட்டு சாசனம் ஆகும். அவர் கூறுகிறார் :- ""25 ஆண்டு காலம். கலைஞர் முதல் அமைச்சராகி தமிழ்நாட்டிலே ஒரு நிலையான இயக்கமாக திராவிட முன்னேற்றக்கழகத்தை நிலைநிறுத்தி, எதிர்க்கட்சியாக வாழ வைத்து, இந்த சமுதாயத்துக்கு போராடக்கூடிய ஆற்றல்மிக்க அமைப்பாக இதைக்காப் பாற்றினார். 25 ஆண்டு காலத்தில் ஸ்டாலினும் ஒரு பெரிய வளர்ச்சி பெற்று இந்த இயக்கத்தின் சார்பாக போராடக்கூடிய அளவிற்கு ஒரு பெரும் படையின் தளபதியாக உருவாகி இருக்கும் இந்த நேரத்தில், அவரை வாழ்த்துவதற்கு அவர் வெற்றி பெறவேண் டும். வேறு யாராவது இதைவிட ஆற்றல்மிக்க தம்பி, ஆற்றல்மிக்க போராட்ட வீரர், ஆற்ற லோடு செயல் படக்கூடியவர், அனைவரையும் அரவணைத்துச்செல்லக்கூடியவர், சமுதாயத்தோடு இரண்டறக் கலந்து விடுகின்ற அந்த மனப்போக்கு கொண்ட தம்பி ஸ்ட hலினைப் போல இன்னொருவர் இருப்பதாகத்தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட செயலுக்கு ஒரு இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெயரைச்சொல்லுகிற வர்கள், அடுத்து யார் பெயரைச்சொல்வார்கள் என்று எண்ணிப் பார்க்கிற போது திராவிட முன் னேற்றக் கழகம் ஸ்டாலினால் தொடர்ந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த இயக்கத்திற்கு தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றக்கூடிய வல்லமை இருக்க வேண்டுமானால், ஸ்டாலின் கையிலே ஒப்படைக்கப்பட்ட அந்த வாள் என்றைக்கும் வெற்றிகரமான வாளாக இருக்க வேண்டுமானால், இன்னும் குறிப்பாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், இந்த சமுதாயம் சொரணையுள்ள சமுதாயமாக இருக்க வேண்டுமானால் ஸ்டாலினைப் போன்ற வர்கள் வரவேண்டும். எனக்கு ஏதோ ஸ்டாலின் இடத்திலே தனிப்பட்ட பற்று பாசம் என்று கருத வேண்டாம். நான் தனிப்பட்ட முறையில் யாரிடமும் பற்று பாசம் வைப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் கலைஞர் வாய் திறந்து அடையாளம் காட்ட முடியாத காரணத்தால் நான் அவர் சார்பாக நான் வாய் திறந்து அடையாளம் காட்டுகிறேன்."" - என்று ஸ்டாலினை - கழக உடன்பிறப்புகளுக்கும் தமிழகப்பொது மக்களுக்கும் அடையாளம் காட்டி இருக்கிறார். இதை விடப் பெரிய நற்சான்று வேறு என்ன இருக்க முடியும்?
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் வாங்கியது போல என்பார்களே; அதுதானே இது?
Subscribe to:
Posts (Atom)
